நவகிரகங்களிலேயே அசுப கிரகங்களாக விளங்க கூடியவைகள் ராகு மற்றும் கேது தான். இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் ஆகும். ஆனால் மற்ற கிரகங்கள் எல்லாம் சீக்கிரத்திலேயே இந்த வகைகள் சனிபகவானுக்கு பிறகு ராகு மற்றும் கேது தான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். பொதுவாக அனைத்து கிரகங்களின் இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் ராகு மற்றும் கேது பகவானின் இடமாற்றமும் கட்டாயம் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் இருவரும் அதே ராசியில் பயணம் செய்வார்கள். அதற்குப் பிறகு ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் கேது அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் செய்வார்கள். இதனால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்று பண மழையில் நனைய போகிறார்கள் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம் ராசி
ராகு மற்றும் கேது மாற்றத்தினால் இதுவரை இருந்த சிக்கல்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்களும் தீர்ந்து போகும். கடன் பிரச்சினைகள் குறைந்து உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றமும் வியாபாரத்திலும் நல்ல லாபமும் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை ராகு பகவானுக்கு விளக்கேற்றி வந்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு கை கொடுக்கும்.
விருச்சிக ராசி
ராகு மற்றும் கேது மாற்றத்தால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட போகிறது. தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும். வியாழக்கிழமை ராகு காலத்தில் ராகு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து புது வாகனம் புது வீடு போன்றவை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தனுசு ராசி
குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது இடமாற்றம் நன்மைகளை மட்டுமே தரும். புது வீடு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமைந்து வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த நஷ்டங்கள் அனைத்தும் சரியாகி தொழிலில் லாபமும் வியாபாரமும் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து வருமானம் வீட்டில் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மரியாதை போன்றவை தானாகவே அமையும். மொத்தத்தில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து வீட்டில் சேமிப்புகள் அதிகமாகும்.
இதனையும் படியுங்கள் : இந்த 5 ராசிக்கார பெண்கள் தான் வீட்டையும் நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்..!