- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். என்னதான் பல பேருக்கு விருப்பமான உணவு பிரியாணி தான் என்று சொன்னாலும் அதையும் தாண்டி பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பராத்தா தான். பராத்தாகளில் இப்போது வகை வகையாக வந்துவிட்டன. சாதா பராத்தா, வீச்சுப் பராத்தா, சிலோன் பராத்தா, முட்டை கொத்து பராத்தா, பொரித்த பராத்தா, சால்னா பராத்தா, கிளி பராத்தா, நூல் பராத்தா, சிக்கன் பராத்தா, கேரள பராத்தா, கோதுமை பராத்தா என அடுக்கிக் கொண்டே போகலாம்.
பராத்தா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு வித சுவைமிக்க அருமையான உணவு. பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. அதனால் நாம் இந்த பதிவில் கோதுமை மாவு வைத்து சுவையான பன்னீர் பராத்தா எப்படி செய்வதென்று பார்க்கலாம். பராத்தா பிரியர்களுக்கு இந்த மாறுதலான பன்னீர் பராத்தா நிச்சயம் பிடிக்கும். சிலருக்கு பராத்தா செய்வது கடினமான விஷயம் என்று நினைத்து பராத்தாவை கடையில் மட்டுமே வாங்கி உண்பார்கள். பராத்தா எல்லோருக்கும் பிடித்த உணவு என்றாலும் அதை செய்வது கடினம் என்று யாரும் வீட்டில் செய்து கொடுப்பதில்லை. ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயும் மிக எளிதாக செய்து விடலாம் என்று. அந்த வகையில் இந்த தொகுப்பில் வீட்டிலேயே எப்படி பன்னீர் பராத்தா செய்யலாம் என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான முருங்கை பராத்தா அதுவும் பிரதமர் மோடிக்கு பிடிச்ச பராத்தா , இம்முறையில் செய்து அசத்துங்கள்!
Ingredients
Method
முதலில் கோதுமை மாவை தேவையான அளவு ஒரு பவுளில் எடுத்து அதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின் பன்னீரை கேரட் துருவலில் துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு, துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து அதன் நடுவில் பன்னீர் கலவையை வைத்து நான்கு பக்கமும் மடித்து மீண்டும் ஒரு முறை தேய்த்துக் கொள்ளவும்.
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் விட்டு பராத்தாவை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் பராத்தா தயார்.






