- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
சப்பாத்தி செஞ்சு அதுல பன்னீர் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு குழந்தைகளுக்கு லஞ்ச் கோ இல்லனா காலைல பிரேக் பாஸ்ட் கோ கொடுத்து பாருங்க ஒன்னு சாப்பிட்டாலே வயிறு ஃபுல்லாகிடும் அந்த அளவுக்கு இதுல பன்னீர் மற்றும் காய்கறிகள் நிறைய வைத்து செய்யப் போகிறோம். பன்னீர் சாப்பிடுவதால் எல்லாருக்குமே புரோட்டின் சத்துக்கள் அதிகமாக கிடைக்கும். புரோட்டின் சத்துக்கள் எல்லாருக்குமே தேவையான ஒன்று அது பலவகையான உணவுகளில் கிடைக்கிறது.
ஆனால் இந்த பன்னீர்ல நிறைய ப்ரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும் அதனால கண்டிப்பா பன்னீர் வச்சு அடிக்கடி ஏதாவது ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. பன்னீர் வச்சு பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் கிரேவி, பன்னீர் 65, பன்னீர் ப்ரை அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி பன்னீர் வச்சு டிக்கா ரோல் மாதிரி ஒரு தடவை மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அவ்ளோ சூப்பரா இருக்கும் கடைகளில் போய் ஷவர்மா வாங்கி சாப்பிடுவதற்கு பதிலா இந்த மாதிரி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு ஷவர்மா அப்படின்னு சொல்லி கொடுத்து சாப்பிட வைக்கலாம்.
குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஏமாத்தி சாப்பிட கொடுத்தால் தான் அவங்களும் கொஞ்சம் சாப்பிட ஆரம்பிப்பாங்க. அதனால குழந்தைகளுக்கு அப்பப்போ கடையில கிடைக்கிறத கொஞ்சம் மாத்தி செஞ்சு கொடுத்த ஆரோக்கியமானதா சாப்பிட வையுங்க. இந்த பன்னீர் ரோல் ஸ்நாக்ஸ்க்கு கூட சாப்பிடலாம் காலைல சுட்ட சப்பாத்தி மீதம் இருந்துச்சுன்னா மாலை நேரத்துல குழந்தைகளுக்கு ஸ்கூல் விட்டு வரும்போது இந்த மாதிரி ஒரு ரோல் செஞ்சு கொடுத்திடலாம்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க இதுல நம்ம தக்காளி சாஸ் மயோனைஸ் எதுவுமே சேர்க்காமல் செய்யப் போறோம். அதனால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது உங்களுக்கு தேவையான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம் இதுல நம்ம குடைமிளகாய் மட்டும் தான் சேர்த்திருக்கோம். உங்களுக்கு தேவைப்பட்டால் கேரட் பீன்ஸ் இதெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான டேஸ்டான பன்னீர் டிக்கா ரோல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கார்லிக் பன்னீர் ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் பன்னீரை நறுக்கி சேர்த்து மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
சப்பாத்திக்கு மாவு பிசைந்து சப்பாத்தியை சாஃப்டாக சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து பன்னீர் வேகும் வரை கலந்து விடவும்.
நீளவாக்கில் நறுக்கிய தக்காளி வெங்காயம் குடைமிளகாய் அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் இறக்கி சுட்டு வைத்துள்ள சப்பாத்தியில் சேர்த்து சுருட்டி பரிமாறினால் சுவையான பன்னீர் டிக்கா ரோல் தயார்.






