- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியரா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஈஸியான முறையில் பன்னீர் வால்நட் கறி செய்து கொடுங்கள். இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பன்னீர். சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் மசாலாவை பலரும் விரும்புகின்றனர்.
குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது. இந்த பன்னீர் வால்நட் கறி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிம்பிளான பன்னீர் மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம். புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம். பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் இந்த பன்னீர் வால்நட் கறியை முயற்சி செய்து பார்க்கலாம். சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பன்னீர் வால்நட் கறி எப்படி தாயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!
Ingredients
Method
முதலில் பன்னீரை துண்டுகளாக நறுக்கி விட்டு ஒரு கடாயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, இலவங்கம், சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் வால்நட் சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடவும். பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் பெரிய துண்டுகளாக நறுக்கி விட்டு தனி தனியாக எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தக்காளி விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பின் எண்ணெய் பிரிந்து வந்ததும் வதக்கிய வெங்காயம், குடமிளகாய், பன்னீரை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இது நன்கு சுண்டியவுடன் கஸ்தூரி மேதி, கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் வால்நட் கறி தயார். இதை சப்பாத்தி, நாணுடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.






