பங்குனி உத்திரம் அன்று இந்த இரண்டு பொருட்களை மட்டும் வாங்கி வீட்டில் வைக்க மறக்காதீர்!

- Advertisement -

முருகப்பெருமானுக்கு உகந்த தினமான பங்குனி உத்திரம் மார்ச் 25 பங்குனி 12ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்று பகல் ஒரு மணி வரைக்கும் பௌர்ணமி திதியும் இருக்கும் எனவே பல்வேறு சிறப்புகள் வாழ்ந்த அந்த பங்குனி உத்திரம் அன்று நாம் முருகப் பெருமானை வேண்டி வழிபட்டால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். பங்குனி உத்திரம் அன்று முருகப்பெருமானை மட்டுமில்லாமல் குலதெய்வத்தையும் வணங்கினால் நம் வீட்டில் சுபிக்ஷம் உண்டாகும். இந்த பங்குனி உத்திரம் அன்று நம் வீட்டில் இரண்டு பொருட்களை வாங்கி வைத்து முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நாம் இழந்த சொத்துக்கள் இழந்த பணம் நகை என அனைத்துமே நமக்கு திரும்ப கிடைக்கும். பங்குனி உத்திரம் அன்று நாம் வாங்கி வைத்த வழிபட வேண்டிய பொருட்களை பற்றியும் வழிபடும் முறையை பற்றியும் பார்க்கலாம்

-விளம்பரம்-

பங்குனி உத்திரம் வழிபட வேண்டிய முறை

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என்பது முருகனுக்கு உரிய ஒரு கூற்று. முருகப்பெருமானை மட்டுமில்லாமல் முருகப் பெருமான் உடைய வேலையும் மயிலையும் நாம் வழிபட்டு வந்தால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் பங்குனி உத்திரம் என்று வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து பூஜை அறையையும் சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து முருகப்பெருமானையும் பூக்கள் கொண்டு அலங்கரித்து கொள்ளவும். முருகப்பெருமானுக்கு உரிய மயில் தோகை வாங்கி அதனை வைத்து பங்குனி உத்திரம் அன்று வழிபட வேண்டும். முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு கீழ் ஒரு சிவப்பு நிற துணியை வைத்து அதன் மேல் இந்த மயிலிறகை வைத்து விட வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த நெய்வேதியமான அப்பம் செய்து பூஜைக்காக வைத்து வழிபட வேண்டும். அப்படி அப்பம் செய்ய முடியாதவர்கள் சிவப்பு நிற பழங்களான மாதுளை அல்லது ஆப்பிள் பழம் வாங்கி வைத்து வழிபடலாம். பங்குனி உத்திரம் என்று முருகப்பெருமானுக்கு மாதுளை வைத்து வழிபடுவது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

குழந்தை பாக்கியம் தரும் பங்குனி உத்திரம்

இதனை எல்லாம் வைத்து வழிபட்டு முருகனுடைய மந்திரங்களை உச்சரிக்கலாம் முருகப்பெருமானுடைய மந்திரங்கள் தெரியாதவர்கள் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பிறகு ஒரு பித்தளை தட்டு ஆறு வெற்றிலை வைத்து அதன் மேல் மெயதீபம் ஏற்றி முருகப்பெருமானுக்கு தீபாராதனை காட்டி பூஜையை முடித்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரம் என்று குழந்தை இல்லாதவர்கள் திருமண தடை உள்ளவர்கள் விரதம் இருந்து பூஜை செய்தால் அதற்கான பலன் விரைவிலே கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வேலையில்லாதவர்களுக்கு வேலை தொழிலில் லாபம் இல்லாதவர்களுக்கு லாபம் என அனைத்தும் கிடைக்கும். முருகப் பெருமானை மனதார வழிபட்டு அனைத்தும் செய்தால் நிச்சயம் அதற்கான பலனை முருகப்பெருமான் தருவார்.