இந்த உலகில் உள்ள அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை என்றால் அது பண பிரச்சனை தான். சம்பாதிப்பதற்கும் சேமிப்பதற்கும் கடுமையாக உழைத்துக் கொண்டே தான் இருப்போம். நான் என்னதான் நாம் உழைத்தாலும் பணம் தங்காமல் நம் வீட்டில் எப்பொழுதும் பிரச்சனைகள் வந்தால் அதை தீர்ப்பதற்கு நிறைய பரிகாரங்கள் செய்வோம் அந்த வகையில் இன்று ஏலக்காய் வைத்து செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் தான் பார்க்க போகிறோம். சுக்கிரனுக்கு உகந்த பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்று ஏலக்காய். நம் வீட்டிலும் நம் கையிலும் எப்பொழுதும் ஏலக்காயை வைத்துக் கொண்டால் சுக்கிரனுடைய பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் வீட்டில் பணமும் அதிகரித்து செல்வ செழிப்போடு வாழ முடியும். அந்த வகையில் இந்த ஏலக்காயை வைத்து செய்யக்கூடிய பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பணத்தை அள்ளித் தரக்கூடிய ஏலக்காய் பரிகாரம்

இந்த பரிகாரம் செய்வதற்கு ஆறு காய்ந்து போகாத நல்ல ஏலக்காய்களை வாங்கிக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை எப்பொழுதும் போல் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து அனைத்து தெய்வங்களுக்கும் பூ போட்டு மகாலட்சுமி தேவிக்கு விளக்கு ஏற்றி நெய்வேதியமாக பால் பாயசம் செய்ய வேண்டும். கையில் 6 ஏல காய்களையும் எடுத்துக்கொண்டு பேனா பென்சில் அல்லது மார்க்கர் எடுத்து சுக்கிரனை நினைத்து பணத்தை ஈர்க்கக்கூடிய ஏஞ்சல் நம்பர் ஆன 571 என்ற எண்ணை ஒவ்வொரு ஏலக்காயிலும் ஏலக்காய்க்கு தகுந்த வண்ணம் சிறிதாக எழுதி கொள்ள வேண்டும் பிறகு அதனை உள்ளங்கையில் வைத்து பணம் அதிகமாக சேர வேண்டும் என்று மனதிற்குள்ளேயே நன்றாக வேண்டிக் கொண்டு அதனை பணம் வைக்கும் இடத்திலும் மணிப்பர்சிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஏலக்காய் பரிகாரம் செய்யும் போது தெய்வத்திடம் கேட்க வேண்டியவைகள்
மணி பர்ஸில் ஏலக்காயை வைக்கும் முன்னர் கைகளில் பணம் அதிகமாக சேர வேண்டும், இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு பணம் சேர வேண்டும், பணக்கஷ்டம் வரவே கூடாது என்று நேர்மறையான வார்த்தைகளை சொல்லி தெய்வத்திடம் வேண்ட வேண்டும் ஒருபோதும் எதிர்மறையான வார்த்தைகளை உபயோகிக்க கூடாது. அப்படி நேர்மறையான வார்த்தைகளை கூறிக்கொண்டே ஏலக்காய்களை மணி பர்ஸில் வைக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்ய வேண்டிய கால அளவு

ஒரு வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு எப்பொழுது ஏலக்காயின் வாசம் நீங்கி ஏலக்காய் முழுவதுமாக காய்ந்து போகிறது அப்பொழுது யாருடைய காலடியில் படாத இடத்தில் இதனை போட்டு விட வேண்டும். முன்னர் உங்கள் மணி பெர்சன் நீங்கள் பணம் வழங்கியதற்கும் இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு பணம் புழங்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் நிச்சயமாக தெரியும். முதல் பரிகாரத்தில் மணி பர்சில் வைத்த ஏழை காய்களை யாருடைய காலடியும் படாத வண்ணம் போட்டுவிட்டு மறுபடியும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்பிக்கையுடன் இந்த எளிமையான ஏலக்காய் பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக சுக்கிரன் மற்றும் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்று பணக்கஷ்டம் இல்லாமல் வாழலாம்.
இதனையும் படியுங்கள் : அதிர்ஷ்டத்தையும் அளவில்லா பணத்தையும் அள்ளித்தரும் கண்ணாடி பரிகாரம் இப்படி ஒரு முறை செய்து விடுங்கள்!




