- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Drinks
பொதுவாக மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நம்முடைய அன்றாட உணவுகளுடன் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு பழம் தான் பப்பாளி.
இது கலோரிகளில் குறைவாக இருப்பதைத் தவிர நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. பப்பாளி ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்தை குறைக்கும்.
எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. அதிலும் அதனை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் போன்று செய்தால், குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள். மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு இதனை மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான பப்பாளி மில்க் ஷேக் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : முலாம்பழம் மில்க்க்ஷேக் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
முதலில் பப்பாளி பழத்தை தோல் நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள், நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் பேரிச்சம் பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிதளவு ஐஸ் கட்டிகள் போட்டு நாம் தயாரித்து வைத்த கலவையை சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பப்பாளி மில்க் ஷேக் தயார்.






