ஒரு சிலர் முலாம்பழம் விரும்பி சாப்பிடுவீங்க ஆனால் ஒரு சிலர் சுத்தமா முலாம்பழம் சாப்பிடவே மாட்டாங்க ஆனா முலாம்பழத்துல வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருக்கிறதால நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் அதிகரிக்க செய்யும். நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கு கண்களுக்கு நல்லது தலைமுடிக்கு நல்லது. கோடை காலத்துல ஏற்படக்கூடிய உடல் சூட்டை தணிக்க கூடியது. இந்த மாதிரி எக்கச்சக்கமாக சொல்லிக்கிட்டே போகலாம். இந்த முலாம்பழம் வைத்து நிறைய ரெசிபீஸ் செய்யலாம் ஐஸ்கிரீம் செய்யலாம் மில்க் ஷேக் செய்யலாம் ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
அந்த வகையில் இன்னைக்கு நம்ம முலாம் பழம் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபி செய்யப்போகிறோம். இந்த முலாம்பழ மில்க் ஷேக் ஒரு தடவை போட்டு குடிச்சிட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி போட்டு குடிப்பீங்க இந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப புத்துணர்ச்சியாக இருக்கும். காலையில பிரேக் பாஸ்ட்க்கு இந்த ஒரு மில்க் ஷேக் மட்டும் கொடுத்தாலே வயிறு நிரம்பிவிடும். குழந்தைகள் வீட்ல இருக்கும்போது காலையில பிரேக் பாஸ்ட்க்கு குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஏதாவது மில்க் ஷேக் ரெசிபி செஞ்சு குடுங்க.
குழந்தைகளும் விரும்பி குடிப்பாங்க டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இதுல நம்ம பாதாம் முந்திரி பருப்பு சேர்க்கிறதால ரொம்பவே ரிச் டேஸ்ட்டில் இருக்கும். கடைசியாக இந்த மில்க் ஷேக்கில் கட் பண்ணுன பாதாம் பருப்பு சேர்த்துக்கிட்டா சுவை ரொம்ப அட்டகாசமா இருக்கும். தேவையான அளவு ஐஸ்கட்டிகள் போட்டு இந்த வெயில் காலத்துல நல்லா குளு குளுன்னு குடிச்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான முலாம்பழம் மில்க்க்ஷேக் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முலாம்பழம் மில்க்க்ஷேக் | Muskmelon Milkshake Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கண்ணாடி டம்ளர்
தேவையான பொருட்கள்
- 1 டம்ளர் பால்
- 1 முலாம்பழம்
- 2 முந்திரி பருப்பு
- 5 பாதாம் பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரைஈ
- ஐஸ் கட்டிகள் தேவையான அளவு
செய்முறை
- மிக்ஸி ஜாரில் முலாம் பழத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் பால் ஊற வைத்த 2 பாதாம் பருப்பு முந்திரி பருப்பு சர்க்கரை ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- அதனுடன் பொடியாக்கிய பாதாம் பருப்பு சேர்த்து பரிமாறினால் சுவையான முலாம் பழ மில்க் ஷேக் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!