என்னதான் வேலை வாய்ப்புகளை தேடி ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒருவர் தன்னுடைய சொந்த காலில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவர் தேர்ந்தெடுக்க கூடியது சொந்தமாக தொழில் செய்வதுதான் சொந்தமாக தொழில் செய்வது என்பது மிகவும் சாதாரண விஷயம் கிடையாது அதற்கு நிறைய உழைக்க வேண்டும் தொழில் நுணுக்கங்கள் தெரிய வேண்டும் அதற்கு போதுமான பண வசதி இட வசதி அனைத்து மேதைப்படும் அந்த தொழிலை கையாளுவதற்கு நமக்கு அந்த தொழிலை பற்றிய முழுமையான அறிவு தேவைப்படும் மேலும் அதற்கு ஆள் வசதியும் தேவைப்படும் அப்படியே அவர்கள் கஷ்டப்பட்டு சொந்தமாக தொழில் தொடங்கினாலும் லாபம் நஷ்டம் என இரண்டுமே மாறி மாறி வரத்தான் செய்யும்

எதிர்மறையாற்றல்
புதிதாக தொழிலை ஒருவர் தொடங்குகிறார் என்றால் அந்த தொழிலை ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்கள் நம்மை விட முன்னேறக்கூடாது என்று எண்ணத்தில் பார்ப்பார்கள் எனவே ஒரு போட்டியாளர் வந்துவிட்டால் அந்த இடத்தில் பொறாமையும் அதிகரிக்கும் எனவே எதிர்மறை ஆற்றலால் கண் திருஷ்டி நாள் கூட தொழில் செய்பவர்களுக்கு நஷ்டங்கள் ஏற்படும். எனவே அந்த கண் திருஷ்டிகையை நீக்குவதற்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதற்கும் சில தாந்திரீக பரிகாரங்கள் உள்ளது அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
தொழில் நஷ்டத்தை தவிர்க்க செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு கருப்பு உளுந்து கருஞ்சீரகம் கருப்பியில் வெண்கடுகு போன்றவைகள் தேவைப்படும் இவற்றை சம பங்கு எடுத்துக் கொண்டு இதனை போட்டு வைப்பதற்கு தனித்தனியாக மண் குடுவைகளை வாங்கி அதனுள் இதனை போட்டு அனைவருடைய கண்களிலும் படும்படி இந்த மண் குடுவைகளை தனித்தனியாக வைக்க வேண்டும். இந்த பொருட்களை பூச நட்சத்திரம் அன்று தான் வாங்க வேண்டும். மேலும் இந்த பொருட்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதிதாக மாற்ற வேண்டும்
பரிகாரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த பொருட்களை மாற்றும் போது பழைய பொருட்களை ஓடுகின்ற தண்ணீர் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும் இந்த பொருட்களை மறுபடியும் பூச நட்சத்திரம் அன்று தான் பார்க்க வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம்மை சுற்றியுள்ள நாம் தொழில் செய்யும் இடத்தில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி தொழிலில் இருக்கக்கூடிய நஷ்டங்கள் குறைந்து லாபம் ஏற்படும். இதனுடன் கொஞ்சம் கடின உழைப்பும் இருந்தால் தொழிலில் நஷ்டத்தை தவிர்த்து லாபத்தை பெறலாம்.
இதனையும் படியுங்கள் : தொழில் முடக்கம் மற்றும் பணம் முடுக்கம் நீங்குவதற்கு தீப வழிபாடு!





