அனைவருடைய வாழ்க்கையிலும் செல்வம் அதிகரிக்க மகாலட்சுமி தாயார் உடைய அருள் முழுவதுமாக கிடைக்க வேண்டும். மகாலட்சுமி தாயார் உடைய அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைத்துவிட்டால் பிரச்சனை என்பதே இல்லாமல் போய்விடும் அப்படி அதிக பிரச்சனை உள்ளவர்கள் மகாலட்சுமி தாயார் உடைய அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஒரு சில பரிகாரங்களை செய்ய வேண்டும் அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அன்னபூரணியின் அருள்
வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து கவலைகளும் நீங்கி நாம் செல்வ செழிப்போடு வாழ லட்சுமி கரமாக நம் வீடு இருக்க வேண்டும் வீட்டை மாற்ற வேண்டும். அதற்கு நமக்கு அன்னபூரணியின் உடைய அருள் முழுவதுமாக கிடைக்க வேண்டும் அன்னபூரணியின் அருள் முழுவதுமாக கிடைக்க நாம் ஒரு சில பரிகாரங்களை மேற்கொண்டால் போதும். அந்த பரிகாரங்களிலேயே நல்ல பலனை கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.
பரிகாரத்தை செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்தை செய்வதற்கு செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பு அல்லது பச்சரிசி எடுத்து அதில் வெல்லமும் சேர்த்து இரண்டையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். புதன்கிழமை காலையில் பசு மாட்டிற்கு அதனை தானமாக கொடுக்கலாம். ஜீவராசிகளுக்கு உணவளிப்பதன் மூலமாக நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும்.
அன்னபூரணியின் அவர்களை பெற செய்ய வேண்டியவை
வீட்டில் எதற்கு குறை இருந்தாலும் சாப்பாட்டிற்கு குறை இருக்கவே கூடாது அதற்கு அதிபதியாக திகழக்கூடிய அன்னபூரணியின் அருள் முழுவதுமாக கிடைப்பதற்கு வெள்ளிக்கிழமை என்று நம் வீட்டில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களான பச்சரிசி உப்பு துவரம் பருப்பு, காய்கறிகள், பழங்கள் போன்று ஏதாவதை சிறு சிறு பாத்திரங்களில் வைத்து மகாலட்சுமி தேவியாருக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வாய்ப்பாடு செய்து முடித்துவிட்டு அந்த உணவுப் பொருட்களை வைத்து நாம் சமையல் செய்யலாம்.
மருதாணி பரிகாரம்
வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றால் மருதாணியை உடைத்து வந்து அதை நிலை வாசலை மாட்டி விட வேண்டும் இப்படி செய்வதால் வீட்டின் செல்வ வளம் பல மடங்கு அதிகரிக்கும் பூஜை அறையில் உள்ள பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து சிறிதளவு பச்சை கற்பூரம் கிராம்பு துளசி இலைகள் சேர்த்து வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும் முக்கியமாக பணம் தங்க நகைகள் வைத்திருக்கக்கூடிய இடத்தில் தெளிக்க வேண்டும்.
தரித்திரம் நீங்க செய்ய வேண்டியவை
வீட்டில் உள்ள தரித்திரம் முழுவதுமாக நீங்குவதற்கு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்து அதன் பச்சரிசி கொட்டைப்பாக்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய குங்குமம் அனைத்தையும் சேர்த்து முட்டையாக கட்டி பூஜை அறையில் ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். ஒரு வருடம் கழித்து அந்த மூட்டையை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கும் இந்த மேற்கண்ட பரிகாரங்கள் அனைத்தையும் முழுமனதோடு செய்து வர உங்களுடைய தரித்திர நிலை மாறி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர பரிகாரம்!




