பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு எளிமையான பல வழிபாடுகள் இருக்கின்றது. அதில் இந்த விளக்கு வழிபாடு மிகவும் சிறந்தது என்று கூறலாம் நிறைய பேர் வீட்டில் உழைத்து சம்பாதித்தாலும் வருமானம் நிலையாக தங்கவில்லை என்று மிகவும் மன வருத்தத்தில் இருப்பார்கள். செலவு அதிகமாக இருக்கும் வரவு மிகவும் குறைவாக இருக்கும் அப்படியான சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படும். வீட்டில் இப்படி மிகவும் நிலைமையை மோசமாக இருக்கும்போது வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். இதற்கு காரணம் பல பிரச்சனை அதிலிருந்து விடுபடுவதற்கு இந்த சூட்சமமான எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.

மூன்று விளக்கு பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு மூன்று மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நேராக ஒரே நேர்கோட்டில் அடுக்கி வைக்க வேண்டும். ஒரு தட்டின் மேல் மூன்று விளக்குகளையும் நேராக வைத்து மூன்று திசைகளை நோக்கி விளக்கு எரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் ஆனால் ஒரே நேர்கோட்டில் விளக்குகள் இருக்க வேண்டும்.
விளக்குகள் எரிய வேண்டிய திசை
முதல் விளக்கு கிழக்கு திசையை பார்த்து எரிய வேண்டும். இரண்டாவது விளக்கை மேற்கு திசை நோக்கி எரிய வைக்க வேண்டும். மூன்றாவது விளக்கை வடக்கு திசை நோக்கி எரிய வைக்க வேண்டும். இந்த மூன்று திசை நோக்கி தீபச்சுடரை எரிய வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
மூன்று திசைக்கும் உரிய அதிபதிகள்
கிழக்கு திசைக்கு இந்திரன் அதிபதி மேற்கு திசைக்கு வருணன் அதிபதி வடக்கு திசைக்கு குபேரன் அதிபதி. குலதெய்வத்தை நினைத்து மாலையில் 6:00 மணிக்கு இந்த மூன்று தெய்வங்களையும் நினைத்துக்கொண்டு மண் அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும் வருமானம் அதிகரிக்க வேண்டும். பிரச்சனைகள் குறைய வேண்டும் பண கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார ஒரு மணி நேரம் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை துவங்குவதாக வைத்துக் கொண்டால் தொடர்ந்து 21 நாட்கள் இந்த விளக்கை வீட்டில் ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளும் தீரும் வருமானம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். உங்களுடைய கஷ்டம் படிப்படியாக குறைந்து நம்பிக்கையை அதிகரிக்கும். இந்த விளக்கு ஏற்றுவதை நிறுத்தக்கூடாது தொடர்ந்து 48 நாட்கள் இந்த விளக்கை ஏற்றலாம் 21 நாட்களும் ஏற்றலாம். மிக மிக எளிமையான இந்த பரிகாரத்தை வீட்டு பூஜை அறையில் செய்யலாம் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதனை செய்து இதன் பலன்களை பெறலாம்.
இதனையும் படியுங்கள் : பணத்தை அள்ளித் தரக்கூடிய கசகசா பரிகாரம்!!


