இந்த உலகத்தில் அனைவருமே வாழ்வதற்கு முக்கியமாக திகழக்கூடியது பணம் அதை சம்பாதிப்பதற்காக பணத்திற்கு பின்னால் தான் அனைவருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவ்வளவுதான் கடினமாக உழைத்த சம்பாதித்தாலும் போதும் என்ற மனம் மட்டும் யாருக்குமே வராது. பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் நினைப்போம் பல தேவைகளுக்காக பயன்படும் பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் சம்பாதித்தாலும் பணம் கையிலேயே நிற்காது சில சமயங்களில் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பணம் இல்லாமல் தவிப்பார்கள் அவர்கள் மகாலட்சுமி தாயை வழிபட்டால் அவர்களுடைய பண தேவைகள் பூர்த்தியடையும்.

ஏலக்காய் மாலை பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்
மகாலட்சுமி தாயார் தான் செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடியவள். மகாலட்சுமி தாயாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு செய்வது மிகவும் நல்லது அன்றுதான் சுக்கிரனுக்கும் மகாலட்சுமி தேவியாருக்கும் உரிய நாள் ஆகும். இந்த குறிப்பிட்ட வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது மிகவும் சிறப்பானது. இதற்கு நமக்கு ஒரு சில பொருட்கள் தேவைப்படும்.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்
மகாலட்சுமி தாயாரின் திருவுருவப்படத்தை சுத்தம் செய்து குங்குமம் சந்தனம் வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தமான காய்ச்சிய பாலையும் வெல்லத்தையும் நெய்வேதியமாக தயார் செய்ய வேண்டும். மல்லிகை பூ முல்லைப் பூ போன்ற வாசனை மிகுந்த மலர்களை மஹாலக்ஷ்மி தாயாருக்கு வைக்க வேண்டும்.
ஏலக்காய் மாலை பரிகாரம் செய்ய வேண்டிய முறை

பிறகு இந்த பரிகாரத்திற்கு மிக முக்கியமாக தேவைப்படக்கூடிய நல்ல பெரிய ஏலக்காய் எடுத்து ஒரு சிவப்பு நிற நூலால் பூ கட்டுவது போல் ஏலக்காய் வைத்து கட்ட வேண்டும். மலையாக தொடுத்த பின்பு ஒரு சிறிய தட்டில் சிவப்பு நிற துணியை விரித்து அதன் மேல் ஏலக்காய் மாலையை வைத்து மகாலட்சுமி தயார் இருக்கு தீப தூப ஆராதனை செய்ய வேண்டும் அப்பொழுது உங்களுடைய மனக்குறைகள் பண குறைகள் அனைத்தையும் கூறி மகாலட்சுமி தாயாரையும் முழு மனதுடன் வேண்டிக் கொள்ளலாம்.
நிறைவேறும் வேண்டுதல்
நீங்கள் நியாயமாக ஒரு வேண்டுதலையும் மகாலட்சுமி தயார்ரிடம் முன்வைத்தார் நிச்சயமாக மகாலட்சுமி தாயார் உங்களுக்கு நல்ல வழி காட்டுவாள் மனதார வேண்டுதல்களை முன்வைத்த பிறகு அந்த சிவப்பு நிற துணியை அப்படியே சிவப்பு நூலால் கட்டி நீங்கள் பணம் வைக்கின்ற இடத்தில் வைக்க வேண்டும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இந்த முடிச்சை எடுத்து மகாலட்சுமி தாயாரின் அருகில் வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும். தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்து வர மகாலட்சுமி தாயாரின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர பரிகாரம்!




