பொதுவாக நாம் என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் நம் கைக்கு பணம் வருவதில் சிக்கல்கள் சில சமயத்தில் ஏற்படும் அப்படியே கைக்கு வந்தாலும் அந்த பணம் அப்படியே செலவாகிவிடும். மேலும் ஒரு சிலர் வீட்டில் பணம் வீண் விரயமாகிக் கொண்டே இருக்கும். அதன் காரணமாக வீட்டில் வறுமை அதிகரிக்கும் கடன் பிரச்சினைகளும் அதிகரிக்கும் பண பிரச்சினைகளும் அதிகரிக்கும். பணம் நம் வீட்டிற்குள் வந்து செல்வத்தை அள்ளித் தருவதற்கு ஒரு சிறிய எளிமையான ஆன்மீக பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.

வீட்டிற்குள் பணம் வர செய்ய வேண்டியவைகள்
நாம் கையில் இருந்து வாசல் தெளித்து கோலம் போடும்போது தண்ணீரில் மஞ்சள் பொடியை சேர்த்து கலந்து வாசலில் தெளித்துவிட்டு கோலப் பொடியுடன் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கோலம் போட்டால் வீட்டிற்கு அதிகமான பணம் வரும். மேலும் வீட்டு நிலை வாசலில் அந்த அரிசி மாவு கோவப்பொடியை வைத்து ஸ்ரீ என்ற நிலை வாசலில் ஒரு பக்கமாக இந்த வார்த்தையை எழுத வேண்டும். ஏனென்றால் நடுவில் எழுதி விட்டால் அதனை விதிக்க வேண்டிய சூழலில் ஏற்படும் எனவே ஸ்ரீ என்ற அந்த வார்த்தையை மிதிக்காமல் இருக்க நிலை வாசலுக்கு ஒரு பக்கமாக அந்த வார்த்தையை எழுதிக் கொள்ளலாம்.
நிலைவாசலில் எழுத வேண்டிய வார்த்தை
பள்ளிவாசலில் எழுதிய ஸ்ரீ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால் மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்ற அர்த்தம். இதேபோல் தொடர்ந்து செய்யலாம் இல்லையென்றால் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை அமாவாசை கிருத்திகை பௌர்ணமி சஷ்டி போன்ற விசேஷமான நாட்களிலும் செய்யலாம். மேலும் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் குங்குமத்தை தடவி நிலை வாசலில் இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம். இவற்றை தொடர்ந்து செய்தாலே நம்முடைய வீட்டில் செல்வம் அதிகரிக்கும் பணத்தடை ஏற்படாது. நம்பிக்கையோட முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் மற்றும் செல்வ வளங்கள் அதிகரிக்க நாம் சமையல் அறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!




