ருசியான பருப்பு உருண்டை மோர்க்குழம்பு இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்! சுட சுட சாதத்துக்கு பக்காவான குழம்பு!

மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பருப

By Prem Kumar · 14/11/2023

மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. பருப்பு உருண்டை மோர்க்குழம்பு பாரம்பரிய சுவைமிக்க குழம்பு வகை. நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் பருப்பு உருண்டை சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு.

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள ஸ்பெஷல் பருப்பு உருண்டை சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள். உருண்டை காரக்குழப்பு சாப்பீட்டு இருப்பீங்க ஆனால் பருப்பு உருண்டை மோர் குழம்பு அதை விட அருமையாக இருக்கும். இந்த மாறுபாடு குறிப்பாக திருமணங்கள் அல்லது விசேஷ நிகழ்வுகளின் போது பொதுவாக செய்யப்படும் குழம்புகளில் ஒன்றாகும்.

இது கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த பருப்பு உருண்டை மோர்க்குழம்பை மிகவும் சுலபமாக செய்யலாம் அதே சமயத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை இருக்கும். பருப்பு உருண்டை மோர்க்குழம்பை இரண்டு விதமாக செய்யலாம். உருண்டைகளை பிடித்து மோர்க்குழம்பு செய்து அதில் போட்டு மூடி வைத்து வேக வைக்கலாம், அல்லது பருப்பு உருண்டைகளை வேக வைத்து அதன் பின்னர் மோருடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full