- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish

பட்டாணி குருமா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க இன்னைக்கு நம்ம மசாலா அரைச்சு ஊத்தி ஒரு சூப்பரான பட்டாணி குருமா ரெசிபி பார்க்க போறோம். இதை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு மூணு சப்பாத்தி எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க சாதமும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. இந்த டேஸ்ட் ஆன ரெசிபிக்கு நிறைய பேரு அடிமையாகவே மாறிடுவாங்க.
அந்த அளவுக்கு இந்த பட்டாணி குருமா ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பட்டை கிராம்பு எதுவுமே சேர்க்காமல் வீட்ல அரைத்த குழம்பு மிளகாய் தூள் வச்சு ஒரு சூப்பரான பட்டாணி குருமா ரெசிபி செய்யலாம். இந்த பட்டாணி குருமா ரெசிபிக்கு நம்ம உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். நீங்க இந்த மாதிரி ஒரு ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்து இருக்கவே மாட்டீங்க.
இதுக்கு நம்ம வெங்காயம், தக்காளி, சீரகம் மிளகு தேங்காய் இதெல்லாம் அரைச்சு சேர்க்கும் போது வாசனையாக இருக்கும். குழம்பும் ரொம்பவே ருசியாக இருக்கும் அடுத்த நாள் வரைக்கும் சூடு பண்ணி சாப்பிடும் போது அதே டேஸ்டில் இருக்கும். இதுக்கு நம்ம சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கும்போது டேஸ்ட் இன்னுமே அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக எல்லாருமே வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பட்டாணி குருமா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் தக்காளி சீரகம் மிளகு சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய் துருவலும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
வேகவைத்த பட்டாணியில் குழம்பு மிளகாய் தூள் அரைத்த விழுது சேர்த்து ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி சேர்த்து நன்றாக வேக வைத்து இறக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து விட்டால் சுவையான பட்டாணி குருமா தயார்.






