Advertisement
Uncategorized

சுவையான பட்டாணி தக்காளி கறி செய்வது எப்படி ?

Advertisement

என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என எதாவது ஒரு கூட்டு வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.

இதையும் படியுங்கள் :மதிய உணவுக்கு ஏற்ற தக்காளி கறி கூட்டு செய்வது எப்படி ?

Advertisement

நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த பட்டாணி தக்காளி கறி செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். ஆகையால் இன்று இந்த பட்டாணி தக்காளி கறி கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்து இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பச்சை பட்டாணி தக்காளி கறி | Pattani Tomato Curry Recipe in Tamil

Print Recipe
சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என எதாவது ஒரு கூட்டு வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த பட்டாணி தக்காளி கறி செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.
Course
Advertisement
LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword pattani tomato, பட்டாணி தக்காளி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 257

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் பட்டாணி
  • 1 கப் தக்காளி சாறு
  • ½ tsp சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • 1 கைப்பிடி கொத்த மல்லி

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான
    Advertisement
    அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பின் இதனுடன் பெருங்காயத்தூள், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • பின் இதனுடன் நாம் அரைத்த வைத்த ஒரு கப் அளவு தக்காளி சாற்றை ஊற்றி நன்றாக வதக்கி கொள்ளுங்கள். பின் தக்காளியின் பச்சை வாசனை போகி நன்கு வதக்கி வந்ததும்
  • அதன் பின்பு இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டேபிள் ஸாபூன் தனியா தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
  • பின்பு தீயை மிதமாக ஏரிய விட்டு பின் கடாயை மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்கு வேக வைத்து கொள்ளுங்கள். பின்பு கிரேவியை நன்றாக கிளறி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளுங்கள்.
  • பின்பு கிரேவி நன்றாக கொதித்து வந்ததும் பச்சை பட்டாணியை சேர்த்து ஆறு நிமிடங்கள் நன்கு வேக வைத்து கொள்ளுங்கள். காய்கறிகள் நன்றாக வெந்ததும் கரண்டியால் மசித்து விட்டு சிறிது கொத்தமல்லியை தூவி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான பட்டாணி கறி தயார்.

Nutrition

Serving: 450gram | Calories: 257kcal | Carbohydrates: 21g | Protein: 12g | Fat: 0.8g | Saturated Fat: 0.5g | Cholesterol: 1mg | Sodium: 2mg | Potassium: 385mg | Fiber: 1.1g | Sugar: 2.5g | Calcium: 1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

2 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

12 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

12 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

13 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

15 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

16 மணி நேரங்கள் ago