Home சைவம் வீடே மணக்க மணக்க சூப்பரான பீர்க்கங்காய் தேங்காய் பால் கிரேவி இப்படி செய்து பாருங்கள்!

வீடே மணக்க மணக்க சூப்பரான பீர்க்கங்காய் தேங்காய் பால் கிரேவி இப்படி செய்து பாருங்கள்!

வழக்கமான மதியம் குழம்பிற்க்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அப்படியானால் அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீர்க்கங்காய் தேங்காய் பால் கிரேவி‌ செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். பெரும்பாலும் இந்த பீர்க்கங்காய் கிரேவி தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. ஒரு சிலர் எந்த உணவிலும் காரத்தை தவிர்ப்பார்கள். ஒரு சிலர் தேங்காய் சேர்த்து மட்டுமே உணவு சமைப்பார்கள், தேங்காய் இல்லாமல் எந்த உணவும் இருக்காது. காரம் குறைவாக சாப்பிடுபவர்களுக்கு இந்த கிரேவி சிறந்த உணவாக இருக்கும்.

-விளம்பரம்-

பீர்க்கங்காயில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடி பிரச்சனையை விரைவாக சரி செய்கிறது. எனவே அடிக்கடி பீர்க்கங்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். ஆனால் பீர்க்கங்காய் என்றாலே பலருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு பீர்க்கங்காய் என்றாலே சாப்பாடு இறங்காது. ஆனால் இந்த முறையில் ஒரு முறை பீர்க்கங்காயை சமைத்துக் கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு துண்டு பீர்க்கங்காய் கூட மிஞ்சாது, எல்லாமே காலியாகிவிடும். இந்த பீர்க்கங்காய் கிரேவி காரக்குழம்பு, பூண்டு குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும். செய்து பாருங்கள்.இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது. எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Print
5 from 1 vote

பீர்க்கங்காய் தேங்காய் பால் கிரேவி | Peerkangai Gravy Recipe In Tamil

வழக்கமான மதியம் குழம்பிற்க்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அப்படியானால் அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீர்க்கங்காய் தேங்காய் பால் கிரேவி‌ செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். பெரும்பாலும் இந்த பீர்க்கங்காய் கிரேவி தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. ஒரு சிலர் எந்த உணவிலும் காரத்தை தவிர்ப்பார்கள். ஒரு சிலர் தேங்காய் சேர்த்து மட்டுமே உணவு சமைப்பார்கள், தேங்காய் இல்லாமல் எந்த உணவும் இருக்காது. காரம் குறைவாக சாப்பிடுபவர்களுக்கு இந்த கிரேவி சிறந்த உணவாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Peerkangai Gravy
Yield: 4 People
Calories: 130kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 பீர்க்கங்காய்
  • 1 கப் தேங்காய்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பீர்க்கங்காயை தண்ணீரில் நன்கு அலசி விட்டு தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயை சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பீர்க்கங்காயை சேர்த்து வதக்கவும்.
  • பின் மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பீர்க்கங்காய் சிறிது வெந்ததும் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு‌ அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் தேங்காய் பால் கிரேவி தயார். இது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 130kcal | Carbohydrates: 5g | Protein: 7g | Fat: 8g | Saturated Fat: 0.5g | Sodium: 120mg | Potassium: 300mg | Fiber: 2g | Vitamin A: 20IU | Vitamin C: 15mg | Calcium: 18mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : இனி பீர்க்கங்காய் வாங்கினால் மிஸ் பண்ணாம அவசியம் இப்படி குழம்பு செய்து பாருங்கள்!