நியூமராலஜி என்று சொல்லப்படும் எண் கணித ஜோதிடமும் ஜோதிடத்தை போலவே மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும் ஒரு அதிர்ஷ்ட எண் இருக்கும் என் கணித பலன்களின் அடிப்படையில் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த எண்கள் இருக்கிறது அந்த எண்ணில் பிறந்த ஒரு சிலர் சனி பகவானுடைய அருளையும் முழுவதுமாக பெறுவார்கள். சனிபகவானுடைய ஆசிர்வாதத்தோடு ஒருவர் இருந்தாலே வாழ்க்கையில் பெரும் புகழும் செல்வமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் மூலம் இல்லாமல் கடின உழைப்பால் முன்னேறுவார்கள்.
ரேடிக்ஸ் எண்

எண் கணிதத்தின் படி சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான எண் 8. அதாவது ஒரு மாதத்தில் 8,17,26 போன்ற தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் என்பது 8 ஆகும். சனிபகவானுடைய அருளால் எப்பொழுதுமே இவர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள். என் கணித வல்லுனர்களின் கூற்றுப்படி மூல எண் 8 ஆக இருப்பவர்கள் எளிமையான வாழ்க்கை வாழக்கூடியவர்களாகவும் யோசித்து முடிவு எடுப்பவர்களாகவும் நேரத்தை கடைபிடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
ரேடிக்ஸ் எண் எட்டில் பிறந்தவர்களின் சில குணங்கள்
இந்த ரேடிசிக்ஸ் எண் கொண்டவர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்கும் புகழ் மற்றும் செல்வத்தின் உரிமையாளர்களாக மாறுவார்கள் மேலும் செல்வத்தை அனுபவிக்காமல் சமூகத்தின் நலனுக்காக முதலீடு செய்வார்கள். மேலும் இவர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்ப மாட்டார்கள்.முகஸ்துதியை விரும்ப மாட்டார்கள். மேலும் தங்கள் செய்யும் நற்செயல்களை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அனைத்து வேலையையும் திட்டமிட்டபடி தான் செய்வார்கள் அதனால் இவர்களுடைய வாழ்க்கை சிறப்பாகவே அமையும். ஆன்மீக நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். பொறுமை அதிகமாக இருக்கும் எந்த ஒரு செயலிலும் நிதானமாக அடியெடுத்து வைத்து வெற்றியை காண்பார்கள். பிரச்சனைகளை வந்தாலும் இவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : பெண்களின் பிறந்த மாதமே அவர்களின் குணம் மற்றும் அளுமையை சொல்லும்! நீங்கள் பிறந்த மாதம் எது?



