- Advertisement -
மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று இரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் இ வாடையினால் சாப்பிடுவதற்கு பிடிக்காது. அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மிளகு எலுமிச்சை சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் அந்த வாசனை எதுவும் இல்லாமல் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி சுவையான மீன் வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.
-விளம்பரம்-
மிளகு எலுமிச்சை மீன் வறுவல் | Pepper Lemon Fish Fry
இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மிளகு எலுமிச்சை சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி சுவையான மீன் வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்
Yield: 4
Calories: 822kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மீன்
- 2 தேக்கரண்டி சோம்புத் தூள்
- 2 தேக்கரண்டி மிளகுத்தூள்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 3 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு
- கொத்தமல்லி இலை தேவைக்கு
- உப்பு தேவைக்கு
- தேங்காய் எண்ணெய் தேவைக்கு
செய்முறை
- மிளகுத்தூள், சோம்புத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
- மீன் துண்டுகளை எடுத்து கலவையை அவற்றில் கோட் செய்து 30நிமிடம் ஊற விட்டவும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
- எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான மிளகு எலுமிச்சை மீன் வறுவல் தயார்.
Nutrition
Serving: 100g | Calories: 822kcal | Protein: 76.4g | Fat: 49.8g | Fiber: 10.6g | Calcium: 4.7mg
- Advertisement -