வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கும் பணம் ஒன்று தான் காரணம் இருந்தால் பத்தும் பறந்து போகும் என்று கூறுவார்கள். கடன் கஷ்டம் என்று அனைத்து பிரச்சனைகளுமே தீர்ந்துவிடும். கடனை தீர்ப்பதற்கு பலவிதமான பரிகாரங்களும் வழிபாடு முறைகளும் உள்ளன. அந்தக் கடனை அடைப்பதற்கு பணவரவு உண்டாகுவதற்கு பணத்தை வாரி வழங்கக் கூடிய தெய்வமாக பெருமாளும் மகாலட்சுமி தாயாரும் இருக்கிறார்கள். நமக்கு தேவைப்படக்கூடிய செல்வத்தை பெறுவதற்கு கடன் பிரச்சனைகள் தீருவதற்கு பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளின் மந்திரத்தை கூறி வழிபடுவதால் கடன் பிரச்சனைகள் தீரும். அந்த வழிபாட்டை பற்றி அந்த மந்திரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகத்தை காக்கும் தெய்வம்
இந்த உலகத்தை ரசித்து காக்கும் தெய்வமாக பெருமாள் உள்ளார் செல்வங்களுக்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமியை தன்னுடைய மார்பில் வைத்துக் கொண்டு பெருமாள் திகழுகிறார். இவரை நாம் முழுமனதோடு தொடர்ச்சியாக வழிபட்டு வந்தோம் என்றால் மகாலட்சுமி தேவியாரின் அருளை பரிபூரணமாக பெறலாம். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கி அனைத்து விதமான செல்வ வளங்களும் சிறப்பாக கிடைக்கும். அதற்கு நாம் சில மந்திரங்களை உச்சரித்து பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
பெருமாள் வழிபாடு
இந்த வழிபாட்டை தேய்பிறையில் வரக்கூடிய அமாவாசை அல்லது சனிக்கிழமை அன்றுதான் ஆரம்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டை ஆரம்பிக்கும் நாள் என்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கொள்ள வேண்டும். பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு தாமரை பூ துளசி மாலை வாங்கி கொடுத்து பெருமாளை மூன்று முறை வலம் வந்து உங்களின் அருளால் உங்களுடைய மந்திரத்தை நான் கூறப்போகிறேன் என்று பெருமாளை நினைத்து முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.
துளசி இலை வழிபாடு
பிறகு வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு பின்வரும் பெருமாளுக்குரிய இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். அவ்வாறு நாம் கூறும்பொழுது கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டு கூறுவது மிகவும் சிறப்பானது 108 முறை துளசி இலைகளை வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு முன்பாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். துளசி இலைகள் பெருமாளின் படத்திற்கு கீழேயே இருக்க வேண்டும் மறுநாள் குளித்து முடித்துவிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அந்த துளசி இலைகளை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். தினமும் தொடர்ச்சியாக நாம் இந்த முறையில் துளசி இலையை வைத்து 108 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு துளசி இலையை மறுநாள் எடுத்து யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட வேண்டும்.
மந்திரம்
ஸ்ரீ ஸ்ரீனிவாச குணம் செந்தி
இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும் வீட்டில் அல்லது கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். வீட்டில் மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை 48 நாட்கள் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மகாலட்சுமி தேவியின் அருளையும் சேர்த்து பெற முடியும். கடன் பிரச்சனைகள் இருந்தால் நிச்சயமாக தீர்ந்து செல்வ வளம் உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : நிம்மதியான வாழ்க்கையை வாழ மந்திரம்


