- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நாட்டுக்கோழி உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. நாட்டுக்கோழி சாப்பிடறதால இருமல் சளி போன்ற பிரச்சனைகள் சரியாகும். இடுப்பு வலி கால் வலி போன்ற பிரச்சனைகளும் சரியாகும். நாட்டுக்கோழி குழந்தை பெற்றவர்களுக்கு தொடர்ச்சியாக கொடுத்துட்டு வரும்போது அவங்களோட உடம்பு பலம் பெறும். இந்த நாட்டுக்கோழி வச்சு ஒரு சூப்பரான பிச்சு போட்ட நாட்டுக்கோழி வறுவல் செஞ்சு பாருங்க. எப்பவும் ஒரே மாதிரியா தண்ணி குழம்பு,சுக்கா அப்படின்னு செய்யாமல் ஒரு தடவை இந்த மாதிரி பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுக்கு சின்ன வெங்காயம் சேர்த்து செஞ்சாதான் ரொம்ப டேஸ்டா இருக்கும்.
நல்லெண்ணெய் ஊத்தி செஞ்சீங்கன்னா நாலு வீட்டுக்கு கமகமன்னு மணக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. நாட்டுக்கோழியில எலும்பு தான் அதிகமா இருக்கும் அதனால நாட்டுக்கோழியா அப்படியே கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தடவி இட்லி பாத்திரத்தில் வேக வச்சு அதுக்கு அப்புறமா பிச்சு எடுத்துக்கோங்க. எலும்பு இல்லாம வெறும் கறியா வச்சு செஞ்சாதான் இந்த ரெசிபி ரொம்ப டேஸ்டா இருக்கும். அப்படியே சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும்.
வீட்டில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செஞ்சுடலாம். ஒருமுறை செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. கடைசியா மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் எல்லாம் தூவி இறக்கும் போது கம கமன்னு ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான பிச்சு போட்ட நாட்டுக்கோழி வறுவல் எல்லாருக்கும் ஃபேவரட் ஆன ஒரு ரெசிபி ஆகவே மாறிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான பிச்சுபோட்ட நாட்டுக்கோழி வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாட்டுக்கோழி குழம்பு இந்த மாதிரி ஒரு தடவை வச்சு பாருங்க ரொம்ப ருசியா இருக்கும்!!
Ingredients
Method
நாட்டுக் கோழியை நன்றாக சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து மஞ்சள் தூள் எண்ணெய் தடவி பத்து நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
பிறகு நாட்டு கோழியை பிச்சு போட்டு வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி சேர்த்து கலந்து கொள்ளவும்.
மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து எண்ணெயிலேயே வேக வைக்கவும்.
அனைத்தும் நன்றாக வெந்து வந்ததும் மிளகு தூள், கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி தயார்.






