- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- LUNCH
சிக்கன், மட்டன், மீன், இறால், கனவாய் மீன் அப்படின்னு ஒவ்வொன்னு சாப்பிடும் போதும் நமக்கு ஒவ்வொரு விதமான நன்மைகள் கிடைக்கும். ஆனா நாட்டு கோழி சாப்பிடும் போது இது எல்லாத்தையும் விட ரொம்ப ரொம்ப உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நாட்டுக்கோழி சாப்பிடுவதால் கால் வலி இடுப்பு வலி எல்லாமே சரியாகும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடிக்கடி இந்த நாட்டுக்கோழி கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.
அந்த வகையில நாட்டுக்கோழியில பல வகையான ரெசிப்பீஸ் செய்தாலும் இந்த நாட்டுக்கோழி குழம்பு ரொம்ப ரொம்ப அற்புதமான ஒரு ரெசிபி. இதனை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக செஞ்சிருப்பீங்க ஒரு சிலருக்கு சுத்தமா இது எப்படி செய்றது அப்படின்னே தெரியாது. அந்த மாதிரி தெரியாதவங்க இந்த செய்முறையை பின்பற்றி செஞ்சு பாருங்க ஒரு சூப்பரான நாட்டுக்கோழி குழம்பு உங்களால் செய்ய முடியும். இந்த நாட்டுக்கோழி குழம்பு சுட சுட சாதத்துக்கு ஊத்தி சாப்பிட ருசியா இருக்கும்.
இட்லி தோசைக்கும் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். இதுல நல்லெண்ணெய் ஊற்றி குடிக்கும் பொழுது அவ்வளவு ருசியா இருக்கும் உடம்புக்கும் ரொம்ப ரொம்ப சத்தானது. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த நாட்டுக்கோழி குழம்பு கண்டிப்பா பிடிக்கும். இந்த செய்முறையில நல்லா மசாலா வதக்கி அரைத்து செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ருசியான நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் நாட்டுக்கோழி வாங்கி காரசாரமான ருசியில் நாட்டுகோழி கிரேவி இப்படி செஞ்சி பாருங்கள்! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!
Ingredients
Method
நாட்டுக்கோழியை கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்.
சுருள வதக்கி உப்பு குழம்பு மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கவும்.
பிறகு சீரகம் மிளகு சோம்பு சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து அந்த விழுதை கோழியுடன் சேர்த்து கிளறவும்.
தேங்காயையும் அரைத்து சேர்த்து அந்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
தேவையான அளவு நல்லெண்ணெய் கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.






