- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கடையில் வாங்கினால் சரியா வருமா? அதற்கு மொத்தமாக ஒரே டைமில் 2 மாதத்துக்கு தாங்கும் அளவுக்கு சூப்பரான ஊறுகாய் வீட்டிலேயே செய்து வைத்துக் கொள்ளலாம். இதுவரை மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்பழடு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்திருப்பீர்கள்.
ஆனால் அன்னாசி பழத்தை கொண்டு ஊறுகாய் செய்ததுண்டா? ஆம் அன்னாசி பழத்தை கொண்டு ஊறுகாய் செய்யலாம் நன்கு காரசாரமாக சிறிது இனிப்பு சுவையுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். நம் அனைவருக்கும் அன்னாசி பழம் என்றாலே நறுக்கி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவது மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் அன்னாசி பழத்தை கொண்டு பலவிதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் இந்த அன்னாசி பழ ஊறுகாய். இதில் நாம் கடுகு, வெந்தயம் அரைத்து சேர்ப்பதால் மிகவும் ருசியாக இருக்கும். இப்போது சுவையான அன்னாசி பழ ஊறுகாய் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ராகி அன்னாசிபழ பூரணம் கொழுக்கட்டை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் அன்னாசி பழத்தை தோல் நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும், அதன்பிறகு நறுக்கிய அன்னாசி பழத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான அன்னாசி பழ ஊறுகாய் தயார்.






