துளியும் கடன், கடன் தொல்லை இல்லாமல் இருக்க இந்த 1 செடி வீட்டில் இருந்தால் மட்டும் போதும்!

- Advertisement -

சிலர் வீட்டில் சம்பளத்தை வாங்கி வருவார்கள். ஆனால் அந்த சம்பளத்தால் எந்த வித முன்னேற்றமும் இருக்காது. வாங்கிய சம்பளம் இரண்டு மடங்காக ஆவதற்கு இந்த செடிகளை வீட்டில் வளருங்கள். ஜோதிட சாஸ்திரத்திற்கு அடுத்த படியாக அதிகப்படியானவர்களால் நம்பப்படுவது வாஸ்து சாஸ்திரம். இதே போல் விருட்ச சாஸ்திரமும் பிரபலமாக இருக்கும் ஒன்றாகும். வாஸ்துவில் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அப்படி விருட்ச சாஸ்திரம் அடிப்படையில் உண்டானது தான் வீட்டில் மணி பிளான்ட் வைக்கும் நம்பிக்கை.

-விளம்பரம்-

மணி பிளாண்ட்

மணி பிளான்ட் நிஜமாகவே பணத்தை ஈர்க்கும் என்றால் ஒரு செடிக்கும் செல்வ வளத்திற்கும், தெய்வீக அருள் பெருகுவதற்கும் என்ன தொடர்பு என பலர் நினைக்கலாம். மணி பிளான்ட் வைத்தால் பணம் வரும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்கு, எப்படி வைத்தால் பணம் வரும், மணி பிளான்ட்டின் தன்மை என்பது பற்றி பலருக்கும் தெரியாது. அதன் தன்மையை, ஆற்றலை தெரியாமலேயே மணி பிளான்ட்டை தவறாக வைத்து வளர்த்து பணம் வரவில்லை, கஷ்டம் தான் வருகிறது என புலம்புபவர்கள் அதிகம்.

- Advertisement -

மணி பிளான்ட் வைக்கும் திசை

மணி பிளான்டினை வீட்டிற்கு உள்ளோ அல்லது வெளியிலோ வைத்து வளர்க்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் அதிக பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் சொல்வதுண்டு. தென்கிழக்கு என்பது விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த திசை என்பதாலும் அங்கு வைப்பது சிறப்பானது. வடக்கு திசையில் வைக்கக் கூடாது.

சங்கு பூ

சங்கு பூ பல நிறமாக காணப்படும். அதில் நீல நிற சங்கு பூவை மட்டும் வளர்ப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். இந்த செடியை வீட்டின் வாசலில் வலது அல்லது இடது வளர்க்க வேண்டும். மகா விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமான இந்த செடியை நம் வீட்டில் வளர்ப்பதால் அன்னை லட்சுமி தேவியின் அருட் கிடைக்கும், நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் இருக்கக்கூடிய சங்குப் பூ தாவரம் நம் வீட்டில் வளர்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் தருவதாக இருக்கின்றன. நீலி அபராஜிதா என அழைக்கப்படும் இந்த கொடி வளர வளர, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வளரும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சங்குப்பூ செடி வளர்த்தால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் வீட்டில் தங்கும்.

-விளம்பரம்-

சனி தோஷம் நீங்கும்

கிருஷ்ண காண்டத்தின் அழகிய நீல மலர்களைக் கொண்ட சங்குப் பூ கொடியை வீட்டில் வளர்த்து, அதை பூக்களை சனி தேவருக்கு சமர்ப்பித்து வழிபடுவதன் மூலம், சனி பகவான் தரக்கூடிய துன்பங்கள் குறையும். சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

எந்த திசையில் சங்குப்பூ கொடியை நட வேண்டும்?

வாஸ்து படி, நீல சங்குப்பூ கொடியை வீட்டில் வடக்கு திசையில் நட வேண்டும். இதனால் சுப பலன்கள் கிடைப்பதோடு வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இந்த கொடியை மேற்கு அல்லது தெற்கு திசையில் நடக்கூடாது.