அலுவலகம், பள்ளி, கல்லூரி, வீட்டு வேலை என பரபரப்பாக இருப்பதால் இல்லத்தரசிகள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் காலை சிற்றுண்டியை தவிர்ப்பது உண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் காலை உணவு உடலுக்கு ஊட்டமளிக்கவும், நாளை சுறுசுறுப்பாக கிக்ஸ்டார்ட் செய்யவும் உதவுகிறது. அதனால் இந்த பதிவில் கலை உணவிற்கு பதிலாக ஜூஸ் வகையார ஸ்மூத்தி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இந்த ஸ்மூத்தி, உங்களை மதிய உணவு வரை திருப்தியாக வைத்திருக்கவும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிக்கவும் உதவுகிறது. இந்த ஸ்மூத்தி குடிப்பது வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் B6 மற்றும் பல வைட்டமின்கலின் ஊட்டச்சத்துக்களை பெறுவீர்கள். இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடிகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் பல்வேறு நோய்கள் உண்டாகக்கூடிய அபாயத்தையும் குறைக்கிறது.
அவல் நட்ஸ் ஸ்மூத்தி | Poga Nuts Smoothie Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 2 கண்ணாடி டம்ளர்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் அவல்
- 1 வாழைப்பழம்
- தேன் தேவையான அளவு
- 10 பாதாம்
- 1/4 கப் உலர் திராட்சை
- 1/4 கப் பால்
- 6 பேரிச்சம்பழம்
செய்முறை
- முதலில் முந்திரி, அவல், பேரிச்சம் பழம் மற்றும் உலர் திராட்சையை ஊற வைத்து கொள்ளவும். வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் நாம் ஊற வைத்த பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி அதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நீங்கள் விருப்பப்பட்டால் நறுக்கிய நட்ஸ் சேர்த்து பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான அவல் நட்ஸ் ஸ்மூத்தி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வெறும் 15 நிமிடத்தில் சுவையான ஓட்ஸ் ஸ்மூத்தி தயார்!