- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். என்னதான் பல பேருக்கு விருப்பமான உணவு பிரியாணி தான் என்று சொன்னாலும் அதையும் தாண்டி பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பராத்தா தான்.
பராத்தாகளில் இப்போது வகை வகையாக வந்துவிட்டன. சாதா பராத்தா, வீச்சுப் பராத்தா, சிலோன் பராத்தா, முட்டை கொத்துப் பராத்தா, பொரித்த பராத்தா, சால்னா பராத்தா, கிளி பராத்தா, நூல் பராத்தா, சிக்கன் பராத்தா, கேரள பராத்தா, கோதுமை பராத்தா என அடுக்கிக் கொண்டே போகலாம். பொதுவாக பராத்தா என்பது மைதாவால் செய்யப்படும் உணவு என்பதால் பொதுவாக தாய்மார்கள் அதை குழந்தைகளுக்கு கொடுக்க மாட்டார்கள் அதனால் நாம் இந்த பதிவில் அவல் மற்றும் கோதுமை மாவு பயன்படுத்தி எப்படி பராத்தா செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான பச்சை பட்டாணி பராத்தா செய்வது எப்படி ?
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் அவலை ஊற வைத்து, பின் தண்ணீர் நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் வெள்ளை எள், ஓமம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஆம்சூர் பவுடர், சாட் மசாலா, மிளகு தூள், சோம்பு தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
இதனை ஊற வைத்த அவலுடன் சேர்த்து அதனுடன் கோதுமை மாவு, கொத்தமல்லி, உப்பு, சிறிதளவு நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து நாம் செய்து வைத்துள்ள கலவையில் சிறிதளவு எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான அவல் பராத்தா தயார்.






