- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கீரை பிடிக்காதவங்களே இந்த மாதிரி ஒரு கீரை பொரியல் செஞ்சு கொடுத்தா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இந்தக் கீரை பொரியல் கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காரக்குழம்பு வத்த குழம்பு செஞ்சு அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த கீரை பொரியல் வைத்துவிட்டால் கண்டிப்பா ருசிச்சு சாப்பிடுவாங்க. காம்பினேஷன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். எல்லா கீரை பொரியலுமே சூப்பரா இருக்கும் அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரை பொரியல் ரொம்ப ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும். அதுவும் இதே செய்முறையில் செஞ்சு பாருங்க கண்டிப்பா கீரையே வேணாம்னு சொல்றவங்க கூட கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் இதுக்கு நம்ம ஒரு குட்டி மசாலா அரைச்சு செய்யப்போறோம்.
தேங்காய் துருவல் காய்ந்த மிளகாய் பூண்டு இது எல்லாத்தையும் அரைத்து சேர்க்கும் போது கீரை பொரியல் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான கீரை பொரியல் ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. கீரை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதுலயும் பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டால் கண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பொன்னாங்கண்ணிக் கீரைகள் இரண்டு வகை இருக்கு சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, பச்சை பொன்னாங்கண்ணிக் கீரை. இது இரண்டுமே பயன்படுத்தி இந்த பொரியல் ரெசிபி செய்யலாம். இதுகூட பாசிப்பருப்பும் சேர்த்து வேகவைத்து செய்ய போறோம் பாசிப்பருப்பு குழைய வேகக்கூடாது. இப்ப வாங்க இந்த பொன்னாங்கண்ணி கீரை ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு கழுவி நறுக்கி வைத்துள்ள பொன்னாங்கண்ணிக் கீரையை சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் பாசிப்பருப்பை சேர்த்து மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கீரையோடு சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் சுவையான பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல் தயார்.






