- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- LUNCH
நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதுவிதமாக கீரை சாதம் செய்து கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் மற்ற உணவுகளை உண்பதை விட கீரைகளை மிகவும் குறைவாகவே உண்கின்றனர். அந்த வகையில் கீரைகளை உண்ணாத குழந்தைகளுக்கு இதைப்போல் கீரை சாதம் செய்து கொடுக்கலாம். ஆம், இன்று நாம் பொன்னாங்கண்ணி கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச்சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் அடங்கியுள்ளது. “கீரைகளின் ராணி” என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்கண்ணியே. காலையில் எழுந்தவுடன் தினமும் பொன்னாங்கண்ணி கீரையினை பச்சையாக மென்று சாப்பிட்டுவர மூளை பகுதியில் இருக்கும் நரம்புகள் பலம் பெரும். இதுவரை பொன்னாங்கண்ணி கீரையை நீங்கள் சட்னியாகவோ, பொரியலாகவோ செய்திருக்கலாம். ஆனால் அடுத்தமுறை பொன்னாங்கண்ணி கீரையை சாதம் போல் செய்து கொடுங்கள். இந்த பொன்னாங்கண்ணி கீரை சாதம் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : கப்பக்கிழங்கு முருங்கைக்கீரை அடை இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் பொன்னாங்கண்ணி கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி, மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் கடலை பருப்பு, உளுந்து பருப்பு, நிலக்கடலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கீரை, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
இத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, இறுதியாக நாம் வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வல்லாரை கீரை சாதம் தயார். இதனையும் உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.






