நம் வீட்டிலும், கோவிலிலும் கடவுளை பிராத்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் கெட்ட சகுனமா!

- Advertisement -

பொதுவாக நாம் நமக்கு என்ன கஷ்டங்கள் பிரச்சனைகள் குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் தெய்வம் தான் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையோடு தான் கோவில்கள் சென்று அல்லது வீட்டில் பூஜை அறையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வோம். ஒரு சிலர் இப்படி அவர்களின் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்யும்போது அவர்களை அறியாமல் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கும் ஆனால் வீட்டில் பூஜை அறையில் இப்படி பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் விடுவது நல்லதா ? கெட்டதா ? ஏன் பிரார்த்தனை செய்யும்போது கண்களில் தண்ணீர் வருகிறது என்பது பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

மனகலக்கம்

நீங்கள் யோசிக்கலாம் அது எப்படி பூஜை அறையில் பூஜை செய்யும் போது அழுகை வரும். ஆனால் பெரும்பாலானவர் தங்கள் மனதில் இருக்கும் ஆசைகளை, குறைகளை கஷ்டங்களை, பிரச்சினைகளை தெய்வங்களிடம் பிரார்த்தனையாக கூறும்போது மனதில் ஒரு கலக்கம் ஏற்படும் ஆனால் ஒரு சிலருக்கு இந்த மனக்கலகத்தின் போது அவர்களையும் அறியாமல் கண்களில் இருந்து தண்ணீர் வரும் ஏன் நீங்களே கூட கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு சில நேரங்களில் கண்கலங்கி இருப்பீர்கள். இப்படி நாம் பூஜை அறையில் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கும் போது அழுவது நமக்கு நன்மையை தரக்கூடியது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை

பொதுவாக வெள்ளிக்கிழமை நாட்களில் வீட்டில் அழக்கூடாது, சண்டை போடக்கூடாது அழுகை சத்தமே கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். ஏனென்றால் நம் வீட்டிற்கு துரதிர்ஷ்டம் தேடி வரும். ஆனால் நாம் இது போன்ற கடவுளை பிரார்த்திக்கும் போது அவரை நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்யும் போது நம் கண்களில் இருந்து தண்ணீர் வருவது நல்ல விஷயமாகவே பலரும் சொல்கின்றனர். முடிந்த அளவு வீட்டுப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இறைவனை பிரார்த்தனை செய்யும் போது அழுகாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் பிரார்த்தனை செய்யும்போது நம் உடைய தன்னம்பிக்கை தான் அதிகரிக்க வேண்டுமே தவிர அழுது கொண்டிருக்கக் கூடாது.

கஷ்டங்களை நினைத்து அழுகக்கூடாது

இப்படி பிரார்த்தனை செய்யும்போது உங்கள் வேண்டுதல்களை, விருப்பங்களை, தெய்வங்கள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். அதை தவிர்த்து கொண்டு உங்களுக்கு இருக்கும் கஷ்ட, நஷ்டங்களை நினைத்துக் கொண்டு பூஜை அறையில் ஒருபோதும் பிரார்த்தனைகள் செய்யக்கூடாது. இப்படி நீங்கள் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை நினைத்துக் கொண்டு கடவுளை பிரார்த்தனை செய்யும்போது அவரால் உங்களுக்கு நடக்கவிருக்கும் நன்மைகளும் நடக்காமல் போய்விடும். ஆனால் நாம் கோவில்களில் கடவுளை தரிசனம் செய்யும் போது நாம் மன கண்களால் அவரை பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் நம் கண்களில் இருந்து தண்ணீர் வரும். இது நல்ல விஷயம் இப்படி வரும் கண்ணீர் நல்ல சகுனமாகவே கருதப்படுகிறது.

நம்பிக்கை

நீங்கள் எப்பொழுது உங்கள் மன கண்களால் இறைவனை கண்டு அவரின் மேல் முழு நம்பிக்கையோடு எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு நீங்கள் தான் என்று நம்பிக்கையோடு நாம் பிரார்த்தனைகளை அவரிடம் வைக்கின்றோமோ அன்றைக்கு உங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வரும். ஆகையால் இறைவனிடம் நாம் பிரார்த்தனை செய்யும்போது இந்த வித கஷ்ட, நஷ்டங்களையும் நினைக்காமல் மனதில் நம்பிக்கையின்மை இல்லாமல் பிராத்தனை செய்யாதீர். முழு மனதோடு அவரே பூஜித்து பிரார்த்தனை செய்பவர்களுக்கு அவர் என்றும் நல்லதையே செய்வார் அதனால் முதலில் நம்புங்கள் நம்பிக்கையுடன் எது செய்தாலும் அது நல்ல பலனையை நமக்கு கொடுக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here