நாம் நமது வீட்டில் பணம் சேர வேண்டும் தங்கம் சேர வேண்டும் சொத்துக்கள் நிறைய சேர வேண்டும் என வருடம் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டிருப்போம் அதனுடன் எத்தனையோ ஆன்மீக ரீதியான பரிகாரங்களையும் நாம் செய்தாலும் அந்த பரிகாரங்களும் நமக்கு கை கொடுப்பதற்கு நமக்கு சிறிதளவு நாளும் அதிர்ஷ்டம் என்பது தேவைப்படும். அந்த அதிர்ஷ்டம் என்பது எல்லாருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டமமோ நம்மளிடம் வருவதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் போல, நான் ராசி இல்லாதவன், அதிர்ஷ்டம் இல்லா வாழ்க்கை என பலர் நம்மிடம் புழம்பி இருப்பார்கள் ஆனால் அதுவும் உண்மைதான்.
அதிர்ஷ்டம்
உதாரணமாக செல்ல வேண்டுமென்றால் நமக்கு கடன் தேவைப்படும்பொழுது யாரிடம் கடன் கேட்டாலும் கிடைக்கவே கிடைக்காது. ஏன் அது நமக்கு தெரிந்தவர் எல்லாருக்கும் கடன் கொடுத்த உதவுபவர் என்ற நபராக இருந்தாலும் கூட நாம் சென்று கடன் கேட்கும் போது அவர்களால் கடன் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். ஆனால் சில பேர் எப்பொழுது கடன் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட அவர்கள் கேட்ட நேரத்தில் உரிய பணம் அவர்கள் கைக்கு வந்துவிடும். இப்படி ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்பது இருக்கும் போது அவர்கள் நினைத்ததெல்லாம் வாழ்க்கையை நடந்து கொண்டிருக்கும். அப்படி அதிர்ஷ்டம் இல்லாத உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வரவேண்டும் என்பதற்காக ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நான் காணலாம் வாருங்கள்.
பரிகாரம்
இப்படி அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதற்காக பெரிதாக ஒன்றும் செய்ய தேவை இல்லை எளிமையான ஒரே ஒரு பரிகாரம் செய்து விட்டாலே போதும் அதிர்ஷ்டம் என்பது நம் வீடு தேடி வந்துவிடும். அப்படி இந்த பரிகாரம் செய்வதற்கும் நமக்கும் பெரிது செலவாகாது எளிமையாக முடித்து விடலாம் இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு ஒரு பூட்டு மட்டும் போதும் அந்த பூட்டும் உங்கள் கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்து சில்வர் போட்டு அல்லது பித்தளை கூட்டாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரம் செய்ய இதே போதுமானதாக இருக்கும்.
பூட்டு
நீங்கள் கடையில் வாங்கும் பொழுது இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும் முதலாவது விஷயமாக மீத பொருட்கள் வாங்குவது போல் பூட்டை வாங்கும்போது எக்காரணம் கொண்டும் பேரம் பேசி வாங்க கூடாது. அவர்கள் என்ன விலை சொல்கிறார்களோ அந்த விலையை கொடுத்து வாங்கி வந்து விடுங்கள். பின்பு பூட்டு சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை கடைக்காரர் திறந்தும் காட்டக்கூடாது அதேபோல் நீங்களும் கடையில் வைத்து பூட்டை எக் காரணம் கொண்டும் திறந்து பார்க்க கூடாது. பூட்டை அப்படியே வாங்கி வந்து நீங்கள் இரவு தூங்கும் போது உங்களுக்கு தலையணைக்கு அடியில் வைத்து இரவு முழுவதும் அப்படியே தூங்கி விடுங்கள்.

அதிர்ஷ்டம் வர வேண்டுதல்
பின்பு மறுநாள் எழுந்து காலையில் நீங்கள் வழக்கம் போல செய்யும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு குளித்து சுத்த பத்தமாக உங்கள் வீட்டின் பூஜை அறையில் உள்ள வேலைகளையும் முடித்துவிட்டு. நீங்கள் உங்கள் தலையணைகள் அடியில் வைத்திருக்கும் பூட்டை எடுத்து திறக்காமல் உங்களுக்கு வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அந்த கூட்டை கையில் வைத்துக் கொண்டு அங்குள்ள தெய்வத்தை நினைத்து இத்தனை நாள் என்னுடன் இல்லாமல் இருக்கும் அதிர்ஷ்டம் என்னுடன் வர வேண்டும் என்றும் உங்களின் அனைத்து விதமான தேவைகளையும் கூறி நன்கு மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.
பூட்டை வைத்து விட்டு வாருங்கள்
பின்பு நீங்கள் தெய்வத்திடம் முறையிட்டு வேண்டிய பின்பு நீங்கள் கையில் வைத்திருக்கும் பூட்டை கோவிலில் வைத்துவிட்டு வந்து விடுங்கள் அவ்வளவு தான் பரிகார முடிந்தது. இப்படி இந்த எளிமையான பூட்டு பரிகாரத்தை நீங்கள் செய்து முடித்தவுடன் அதிர்ஷ்டம் என்பது உங்களுடன் வர ஆரம்பித்துவிடும் அதை நீங்களே சிறிது நாட்களில் உணர ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் வீடு செல்வ செழிப்புடன் இருக்க நீங்கள் எந்த காரியம் தொடங்கினாலும் அதனுடன் அதிர்ஷ்டமும் சேர்ந்து கைகொடுக்கும் அதனால் நம்பிக்கையுடன் இந்த பூட்டு பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கொடுக்கும்.


