உருளைக்கிழங்கு வைத்து இந்த மாதிரி ஒரு சாண்ட்விச் ரெசிபி செஞ்சு பாருங்க சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பொதுவா இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு சாண்ட்விச் பிரெஞ்ச் ப்ரைஸ் பீட்சா பர்கர் இந்த மாதிரி ரெசிபிஸ் தான் ரொம்ப பிடிக்குது. இதையெல்லாம் நைட் டின்னருக்கு கூட சாப்பிடறாங்க ஆனா இதை எப்பவுமே கடையில் வாங்குவது அவ்வளவு நல்லது கிடையாது அதனால எப்பவுமே கடையில் வாங்காமல் வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு பாருங்க.
ஆரோக்கியமானதாகவும் இருக்கும், அதே சமயத்துல குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். சுவையான இந்த ரெசிபி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட ஒரு சூப்பரான ரெசிபியாக இருக்கும். இதுல உங்களுக்கு இன்னும் என்னென்ன காய்கறிகள் தேவையோ எல்லாமே சேர்த்துக்கலாம். இதுல நம்ம வெறும் உருளைக்கிழங்கு சீஸ் மட்டும் வச்சு செய்ய போறோம்.
ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான சாண்ட்விச் ரெசிபி செய்யலாம். வீட்ல இருக்கக்கூடிய சிம்பிளான பொருட்கள் மட்டுமே போதுமானது. பெருசா எதுவும் தேவைப்படாது. கண்டிப்பாக ஒரு தடவை செஞ்சு பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இனிமேல் குழந்தைகள் சாண்ட்விச் கேட்டால் கடையில் வாங்கித் தராமல் இந்த மாதிரி சிம்பிளா வீட்டிலேயே செஞ்சு போடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான சாண்ட்விச் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு சீஸ் சாண்ட்விச் | Potato Cheese Sandwich Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 6 பிரெட் துண்டுகள்
- 1/4 கி உருளைக்கிழங்கு
- 1/2 கப் துருவிய சீஸ்
- 1 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- தக்காளி சாஸ் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ் நறுக்கிய பெரிய வெங்காயம் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு கொத்தமல்லி இலைகள் சீஸ் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- தோசை கல்லில் பட்டர் சேர்த்து இரண்டு பிரட் துண்டுகள் சேர்த்து ஒரு பக்கம் டோஸ்ட் செய்து ஒரு பிரட் துண்டின் மீது தக்காளி சாஸ் தடவிக் கொள்ளவும்.
- அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை சேர்த்து மூடி இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் சாண்ட்விச் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான பீட்சா சாண்ட்விச் இப்படி ஒரு முறை வீட்டில் ட்ரை பன்னி பாருங்க!