உருளைக்கிழங்கு வைத்த உருளைக்கிழங்கு மசாலா, உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு சாதம், உருளைக்கிழங்கு 65, உருளைக்கிழங்கு மசியல், உருளைக்கிழங்கு போண்டா அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம உருளைக்கிழங்கு வச்சு ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு சட்னி செய்ய போறோம். வீட்ல வெங்காயம் தக்காளி எதுவுமே இல்ல அப்படின்னா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமா இருக்கும் இது ஒரு பாகிஸ்தான் ஸ்பெஷல் சட்னி அப்படின்னு சொல்லலாம்.
இந்த சட்னி இட்லி, தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்குமே செம காம்பினேஷனா இருக்கும். நல்லா புளிப்பா காரசாரமா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் வீட்ல வெங்காயம் தக்காளி இல்லனா இந்த ரெசிபி தான் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரும். கண்டிப்பா ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க வீட்ல இருக்க கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இட்லி தோசைக்கு எப்போ ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரியும் செஞ்சு கொடுத்தா டெய்லி சாப்பிடுற இட்லி தோசையே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு இட்லி, தோசை சாப்பிட்டு ரொம்ப போர் அடிச்சு போயிருக்கும் அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு தினமும் ஒரு சைட் டிஷ் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா இட்லி தோசையவே வேண்டாம்னு சொல்லாம சாப்பிடுவாங்க. இந்த சுவையான ரெசிப்பிக்கு கண்டிப்பா எல்லாருமே நாலஞ்சு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க.
இது எப்படி இருக்கும்னு யோசிக்க வேண்டாம் ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே புடிச்சு போய் அடிக்கடி செய்வீங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் நீங்க இதை செஞ்சு கொடுக்கலாம். இந்த சுவையான உருளைக்கிழங்கு சட்னிக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. அவ்ளோ சூப்பரா இருக்கும் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு டேஸ்ட்டில் உங்களுக்கு இந்த ரெசிபி கிடைக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான உருளைக்கிழங்கு சட்னி ரெசிபி எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
உருளைக்கிழங்கு சட்னி | Potato Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 உருளைக்கிழங்கு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1/4 கப் புளி தண்ணீர்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
செய்முறை
- குக்கரில் உருளைக்கிழங்கு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- இரண்டு உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் நறுக்கி சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் சீரகம், உப்பு, புளித்தண்ணீர் எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- மீதி உள்ள உருளைக்கிழங்கை மசித்து ஒரு கடாயில் சேர்த்து அரைத்து வைத்ததையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்து விட்டால் சுவையான உருளைக்கிழங்கு சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அவல் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்