- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உருளைக்கிழங்கு பொரியல் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலர் உருளைக்கிழங்கு பொரியலுக்கு சிக்கன் மசாலா சேர்த்து செய்வாங்க. ஒரு சிலர் தனி மிளகாய் தூள் சேர்த்து செய்வாங்க ஒரு சிலர் கரம் மசாலா இந்த மாதிரி மசாலாக்கள் சேர்த்து செய்வாங்க. இன்னைக்கு நம்ம சிக்கன் மசாலா சேர்த்து உருளைக்கிழங்கு முட்டை சேர்த்து ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பொரியல் செய்யப் போறோம். இது சாம்பார் சாதம் ரசம் சாதம் தக்காளி சாதம் எல்லாத்துக்குமே செம்ம டேஸ்ட்டா இருக்கும். சுவையான இந்த பொரியல் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அருமையாக இருக்கும்.
டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பாக எல்லாருமே வீட்ல ஒரு தடவை செஞ்சு பாக்கணும். இதுக்கு இரண்டு முட்டை இருந்தாலே போதுமானது. இரண்டு உருளைக்கிழங்கு இருந்தாலும் போதும் அதை வச்சு சூப்பரா செஞ்சுடலாம். முட்டை கம்மியா இருக்கு இல்ல உருளைக்கிழங்கு கம்மியா இருக்குன்னா இது இரண்டையும் சேர்த்து நிறைய பொரியல் செய்யலாம். இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே சாப்பாடு கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவாங்க அதனால கொஞ்சம் அதிகமாகவே செஞ்சு வச்சுக்கோங்க.
இந்த பொரியலை சுடு சாதத்தில் போட்டு பிரட்டி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம் ரொம்ப சூப்பரா இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. பொதுவா பீன்ஸ் கேரட்டில் எல்லாத்தையும் முட்டை போட்டு செய்வாங்க ஆனா உருளைக்கிழங்கு சேர்த்து செஞ்சு இருக்க மாட்டாங்க அதையும் ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இதுல நம்ம சிக்கன் மசாலா செய்யறதால டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான உருளைக்கிழங்கு முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் காலிஃபிளவர் குடைமிளகாய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உருளைக்கிழங்கை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் ஒரு பெரிய வெங்காயம் 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைவேக்காடு வெந்ததும் சிக்கன் மசாலா சேர்த்து கலந்து நன்றாக வேக வைத்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு முட்டை பொரியல் தயார்.






