- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
உருளைக்கிழங்கு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு காய்கறி. உருளைக்கிழங்கு வைத்து உருளைக்கிழங்கு புட்டு, உருளைக்கிழங்கு மசியல், உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு குருமா எக்கச்சக்கமான ரெசிபி செய்யலாம் எல்லா ரெசிபியுமே அட்டகாசமா இருக்கும். அந்த வகையில உருளைக்கிழங்கு வைத்து நீங்க உருளைக்கிழங்கு சாதம் செஞ்சிருப்பீங்க இப்ப நம்ம உருளைக்கிழங்கையும் முட்டையையும் சேர்த்து உருளைக்கிழங்கு முட்டை சாதம் செய்ய போறோம். இதில் லஞ்ச் பாக்ஸுக்கு ஒரு சூப்பரான ரெசிபி அப்படின்னு சொல்லலாம்.
வீட்லயும் கூட குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு சாப்பிடுறதுக்கு உங்களுக்கு கஷ்டமா இருந்துச்சு அப்படின்னா இந்த மாதிரி ஒரு தடவை உருளைக்கிழங்கும் முட்டையும் வச்சு சூப்பரான இந்த சாதம் செஞ்சு சாப்பிடுங்க இதுக்கு எந்த விதமான சைட் டிஷ்ஷூமே தேவைப்படாது. கடைசியாக கொத்தமல்லி இலைகள் எல்லாம் சேர்த்து இறக்கினால் சூப்பரான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரெடி ஆகிவிடும்.
ரெண்டு முட்டையும் இரண்டு உருளைக்கிழங்கும் இருந்த யோசிக்காமல் இந்த ரெசிபியை செஞ்சுடுங்க. இந்த டேஸ்டான ரெசிபியை வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் சட்டுன்னு செஞ்சு கொடுக்கலாம். அவங்களும் சாப்பிட்டுட்டு உங்களை பாராட்டி விட்டு தான் போவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான உருளைக்கிழங்கு முட்டை சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மீந்து போன பழைய சாதம் வச்சு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு, சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கியதும் அதில் மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
உருளைக்கிழங்கை சிறியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி கொள்ளவும்.
ஐந்து நிமிடம் கழித்து ஒரு கப் சாதம் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு முட்டை சாதம் தயார்.






