- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
கோதுமை மாவு வச்சு ஆலு பராத்தா செஞ்சிருப்பீங்க. அதே மாதிரி மைதா மாவு வச்சு இந்த சூப்பரான ஆலு பராத்தா ரெசிபி ஒரு தடவ செஞ்சு பாருங்க. கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சிம்பிளான பொருட்கள் வச்சு வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை அப்பிடின்னு சாப்பிடாம இந்த வெரைட்டியான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க. மதியம் வச்சா சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு மீதமிருந்துச்சுன்னா நைட் நேரத்துல இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. இந்த சுவையான ரெசிபி கண்டிப்பாக ரொம்ப ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும்.
நைட் டிபனுக்கு சாப்பிடுறதுக்கு இந்த ரெசிபி அவ்வளவு அருமையாக இருக்கும். நைட் நேரத்துல ஒரே மாதிரியா சப்பாத்தி பூரி அப்படின்னு செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான டேஸ்டான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு அசத்துங்க. வீட்ல இருக்க கூடிய சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு நெய் தேவைப்படும் நெய்யில் சுட்டு எடுத்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். சில்லி பிளேக்ஸ் கொத்தமல்லி இலைகள் இதெல்லாம் சேர்த்து செய்யும் போது கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான ஆலு பராத்தா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு ஏற்ற ருசியான பன்னீர் பராத்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 பராத்தா அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து உரித்து மசித்து கொள்ளவும்.
பிறகு அதில் சில்லி பிளேக்ஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், உப்பு, மைதா மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அதனை சப்பாத்தி போல தேய்த்து தோசை கல்லில் சேர்த்து நெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு பராத்தா தயார்.






