- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பொட்டுக்கடலை பெரும்பாலும் நம்ம சட்னி செய்ய தான் பயன்படுத்துவோம். ஆனால் பொட்டுக்கடலையை வச்சு ஒரு சூப்பரான குழம்பு செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இதனை இட்லி தோசை சப்பாத்தி பூரினு எல்லாத்துக்குமே சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இந்த டேஸ்டான ருசியான பொட்டுக்கடலை குழம்பு ரெசிபி ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, அதுக்கப்புறம் சட்னி சாம்பாரே ஊத்தி சாப்பிட மாட்டீங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இட்லி ஊத்தி வச்சிட்டு அது வேகறதுக்குள்ள இந்த ரெசிபியை சீக்கிரத்தில் செய்துவிடலாம்.
டேஸ்ட் ரொம்பவே அருமையாக இருக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். டக்குனு ஏதாவது சைடிஷ் செய்யணும் அப்படின்னா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. இந்த சுவையான டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா ரெண்டு மூணு இட்லி சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் கடைசியா கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கும்போது கம கமன்னு வாசனையோட ரொம்பவே டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான பொட்டுக்கடலை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பருப்பு இல்லாமல் ருசியான பொட்டுக்கடலை சாம்பார் இப்படி செய்து பாருங்க! அவசர நேரத்தில் கை கொடுக்கும்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
சாம்பார் தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கியதும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதனையும் போட்டு கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.






