- Prep
- 2h 15m
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது சுவையான இறால் பிரியாணி இது போன்று ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த வார கடைசியில் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த பிரியாணி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இறாலின் தலையை நீக்கி விட்டு தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து வைக்கவும்.
பிறகு அரிசியை களைந்து விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு 3 நிமிடங்கள் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு அதனுடன் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடத்திற்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் அதில் சுத்தம் செய்த இறாலை போட்டு சுருளும் வரை 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு போடவும். தூள் வாசனை போகும் வரை 2 நிமிடங்கள் நன்கு பிரட்டி விடவும்
அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் கிளறி விட்டு நன்கு கொதிக்க விடவும்
மசாலா கலவை நன்கு கொதித்து பொங்கி வரும் போது அரிசியை போடவும் அரிசியை போட்ட பிறகு கிளறிவிட்டு குக்கரை மூடி வெய்ட் போட்டு 8 நிமிடங்கள் வேக விட்டு, வெந்ததும் இறக்கி விடவும்.
பின்னர் குக்கரை திறந்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி கிளறிவிட்டு, கொத்தமல்லித் தழையை தூவி கிளறி விடவும்.
சுவையான இறால் பிரியாணி தயார். நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.






