வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பதிவு உங்களுக்கு தான். இன்று நாம் பூசணிக்காய் வைத்து வித்தியாசமான கறி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த பூசணிக்காய் கறியை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் வித விதமாக சமைத்து சுவைக்கிறார்கள். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பூசணிக்காயை கோடைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் பிடிக்குமானால், இதுவரை அதைக் கொண்டு பொரியல் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்றால், இனிமேல் அதைக் கொண்டு அட்டகாசமான கறி செய்து சாப்பிடுங்கள்.
இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்குமாறு அற்புதமான சுவையுடன் இருக்கும். மேலும் இந்த கறி சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். குறிப்பாக மஞ்சள் பூசணியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை தாமதப்படுத்தி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதில் கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைப்போருக்கு மிகச்சிறப்பான காய்கறி. இந்த பூசணிக்காய் கறி சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.
பூசணிக்காய் கறி | Pumpkin Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1/4 கி பூசணிக்காய்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பில்லை
- 1/4 கப் தேங்காய் துருவல்
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
தாளிக்க :
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 5 பல் பூண்டு
செய்முறை
- முதலில் பூசணிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- இது ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
- பின் பெருங்காயம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து பூசணிக்காயை சேர்த்து வதக்கவும். நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பூசணிக்காய் கிரேவி தயார். இந்த கிரேவி சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பூசணிக்காய் புளிக்குழம்பு இனி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!