- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பூசணிக்காயில ரெண்டு விதமான பூசணிக்காய் இருக்கு உன்னை வெள்ளை பூசணிக்காய் இன்னொன்னு மஞ்சள் பூசணிக்காய் இந்த ரெண்டு பூசணிக்காயுமே சாப்பிடுவது நம் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அப்படின்னு சொல்லலாம். வெள்ளை பூசணிக்காயில் ஜூஸ் போட்டு குடிச்சா உடல் எடை நல்லாவே குறையும் அது மட்டும் இல்லாம உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளையும் கொடுக்கும். ஆனா நிறைய பேருக்கு இந்த பூசணிக்காய் சுத்தமா பிடிக்காது அப்படி பூசணிக்காயை வெறுக்கிறவங்க கூட இந்த மாதிரி ஒரு தடவை பூசணிக்காய் வச்சு மசியல் செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பூசணிக்காய் மசியல் காரக்குழம்புக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
ரசம் சாதத்துக்கும் கூட இந்த பூசணிக்காய் மசியலை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வச்சே ரொம்ப குறைவான பொருட்களை வைத்து இந்த பூசணிக்காய் மசியல் ரொம்ப டேஸ்டா செய்யலாம். இந்த பூசணிக்காய் மசியலை எண்ணெய் பூசணிக்காய் அப்படின்னு சொல்லுவாங்க. ரொம்ப பெரிய டேஸ்டான இந்த பூசணிக்காய் மசியல நீங்களும் உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க இந்த பூசணிக்காய் மசியலுக்கு நம்ம மஞ்சள் பூசணிக்காய் பயன்படுத்தினால் இன்னும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான சூப்பரான பூசணிக்காய் மசியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாம்பல் பூசணி உளுந்து வடை இப்படி நம்ம வீட்ல செய்து அசத்தலாம் ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
பூசணிக்காயை நன்றாக தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு பூசணிக்காயை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
பூசணிக்காய் நன்றாக வெந்தவுடன் பூசணிக்காயை நன்றாக மசித்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான பூசணிக்காய் மசியல் தயார்.






