- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
பாஸ்தா நூடுல்ஸ் ஃப்ரைட் ரைஸ் மேகி இந்த மாதிரி பெயரை கேட்டாலே வீட்டில் இருக்கக் கூடிய குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே குஷி ஆயிடுவாங்க. பாஸ்தாவில் சிக்கன் பாஸ்தா எக் பாஸ்தா வெஜிடபிள் பாஸ்தா வொயிட் சாஸ் பாஸ்தா மசாலா பாஸ்தானு நிறைய ரெசிபிஸ் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பூசணிக்காய் வச்சு பாஸ்தா செஞ்சு பாருங்க கண்டிப்பாக உங்க வீட்ல இருக்கிற குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த பாஸ்தா ரெசிபி கொஞ்சம் இனிப்பா தான் இருக்கும் ஆனா டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பொதுவா குழந்தைகளுக்கு மைதா மாவுல செஞ்ச மேகி நூடுல்ஸ் பாஸ்தா இதெல்லாம் கொடுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா எப்பவுமே கொடுக்காமல் எப்பவாவது ஒரு தடவை இந்த மாதிரி ஆரோக்கியமான முறையில் செய்து கொடுத்தா குழந்தைகளுக்கும் நல்லது. குழந்தைகளும் குஷி ஆயிடுவாங்க அந்த வகையில இந்த ரெசிபிக்கு நம்ம மஞ்சள் பூசணிக்காய் தான் சேர்க்க போறோம்.
மஞ்சள் பூசணிக்காய நல்லா வேக வச்சு அரைச்சு விழுதா சேர்க்கும் போது டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இதுல நம்ம கொஞ்சம் பன்னீரும் ப்ரை பண்ணி சேர்க்க போறோம் அதனால எல்லாமே சேர்த்து சாப்பிடுவதற்கு ஒரு அட்டகாசமான ரெசிபியா இருக்கும் இத நீங்க குழந்தைகளுக்கு லஞ்ச் கூட கொடுத்து விடலாம் இல்லனா பிரேக் பாஸ்ட்க்கு கொடுக்கலாம். ஏன் இதை டின்னருக்கு கூட கொடுக்கலாம் கண்டிப்பா குழந்தைகள் மிச்சம் வைக்காம அடம் பிடிக்காமல் சாப்பிட்டு முடிச்சிடுவாங்க ஏன்னா இதுதான் பாஸ்தா ரெசிப்பியாச்சே.
இந்த ரெசிபிக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்கள் மட்டுமே போதுமானது இதுக்கு நீங்க எந்த வகையான பாஸ்தா வேணும்னாலும் பயன்படுத்தலாம். மஞ்சள் பூசணிக்காய் அரைச்சு விட்டு செய்ற இந்த பாஸ்தா ரெசிபி ரொம்ப ரொம்ப வித்தியாசமாகவும் சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். இப்ப வாங்க இந்த வித்தியாசமான மஞ்சள் பூசணிக்காய் பாஸ்தா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடிக்கடி சாப்பிட தூண்டும் சுவையாள பாஸ்தா செய்வது எப்படி ?
Ingredients
Method
முதலில் பாஸ்தாவை சுடு தண்ணீரில் சேர்த்து உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
மஞ்சள் பூசணிக்காயையும் வேகவைத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் முந்திரிப் பருப்பையும் பாலையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து பன்னீரை சதுர வடிவில் நறுக்கி பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாய் என்னை சேர்த்து சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம் பன்னீர் அரைத்து வைத்த பூசணிக்காய் விழுது சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
வேக வைத்த பாஸ்தாவையும் சேர்த்து நன்றாக கிளறி பத்து நிமிடத்தில் இருக்கினால் சுவையான பூசணிக்காய் பாஸ்தா தயார்.






