- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
சத்து நிறைந்த உணவுகள் உடல் நலத்திற்கு உகந்தது. ஆரோக்கிய உணவுகள் உடல் நலத்தை மேம்படுத்தும். குறிப்பாக சிறுதானியங்கள் சத்து நிறைந்தவை. தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் கேழ்வரகு ஆப்பம் செய்வது குறித்துப் பார்க்கலாம். கேழ்வரகு உணவுகள் நீரிழிவு நோய்கள் சாப்பிடுவது நல்லது. அப்பம் அல்லது “ஆப்பம்” என்று அழைக்கப்படும் இப்பண்டம் இந்தியா மற்றும் இலங்கையில் பிரபலமான ஒரு தோசை வகையை சார்ந்த தென்னிந்தியா உணவாகும். இது அரிசி மாவில், தேங்காய் பால் கலந்து செய்யப்படுகின்றது. தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான காலை உணவுகளாக உள்ளன.
அதிலும் குறிப்பாக ஆப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது. இதற்கு காரணமாக இதன் மிருதுவான தன்மையை குறிப்பிடலாம். வழக்கமான இட்லி, தோசையை விட ஆப்பம் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதுவும் நல்ல கூடை போன்ற வடிவத்துடன் பஞ்சு போல மிருதுவான ஆப்பம் செய்வதெல்லாம் ஒரு தனி கலை தான். ஆப்பம் மொத்தம் நான்கு வகையில் தயாரிக்கப்படுகிறது. அவை வெள்ளையாப்பம், பாலாப்பம், முட்டையாப்பம், இனிப்பு அப்பம் என நான்கு வகைகளில் தயாரிக்கபடுகிறது.
வழக்கமாக ஆப்பத்தை பச்சரிசியை வைத்து தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியில் கேழ்வரகு சேர்த்து சத்தான ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேழ்வரகு சேர்த்து செய்வதால் இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. மேலும் கேழ்வரகில் பல்வேறு வகையான ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், நமது ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. கேழ்வரகு ஆப்பத்தை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்கமணக்க காலை டிபனுக்கு ருசியான மசாலா ஆப்பம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் அரிசி, உளுந்தை நன்கு அலசி விட்டு குறைந்தது 6 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஊற வைத்த அரிசி, உளுந்தை ஒரு மிக்ஸியில் சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு நாம் எடுத்து வைத்துள்ள சாதம், தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு, சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். 8 மணி நேரம் வரை மாவு நன்கு புளித்து பொங்கி வரும் வரை அப்படியே வைத்து விடவும்.
பின் ஒரு பவுளில் கேழ்வரகு மாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். பின் இதனை ஆப்ப மாவில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு ஆப்பச்சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி, ஒரு முறை வட்டமாக ஆப்பம் வருவது போல் சுற்றி மூடி போட்டு வேக விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு ஆப்பம் தயார்.






