- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
எப்பவுமே டிபனுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், உப்புமா அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை ராகி மாவு வைத்து பன் தோசை செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். ராகி மாவை உணவில் சேர்த்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு தேவையான பல வகையான சத்துக்கள் கிடைக்கும் எலும்புகள் வலிமையாகும். காரணம் இதுல கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கு அதனால இந்த ராகி மாவில் செய்த பன் தோசையை அடிக்கடி வீட்ல செய்யலாம். இந்த டேஸ்டான ராகி பன் தோசையை ஒரே ஒரு தடவை வீட்ல செஞ்சு பாத்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த ராகி பன் தோசைக்கு கார சட்னி தக்காளி சட்னி இது எல்லாமே ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கும்.
இந்த டேஸ்டான ராகி பன் தோசை ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால கண்டிப்பா ஒரே ஒரு தடவை மட்டும் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. காலையில டிபனுக்கு நைட் டிபனுக்கு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான ரெசிபியாக இது இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுல வெங்காயம் கடுகு உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை எல்லாமே தாளிச்சு போடுறதால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ராகி கார கொழுக்கட்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு ரவை தயிர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கடலை பருப்பு கருவேப்பிலை நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி ராகி மாவில் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து ஒரு குழி கரண்டி மாவு சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான ராகி பன் தோசை தயார்.






