Advertisement
சைவம்

வீட்டால் கொஞ்சம் ராகி மாவு இருந்தால் போதும் சத்தான ராகி லட்டு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Advertisement

நம்ம குழந்தைங்க எப்பவுமே ஈவினிங் டைம்ல ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த நேரத்தில் நம்ம அவங்களுக்கு பஜ்ஜி பக்கோடா பிரட் ஆம்லெட் பிரட் டோஸ்ட் பதிலா ஆரோக்கியமா சிறுதானியங்கள் வச்சு ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுத்தா குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம ராகி மாவும் வேர்க்கடலையும் சேர்த்து செய்யப்போற ராகி சிமிலி தான் பார்க்க போறோம். வெல்லம் சேர்த்து இனிப்பா செய்றதால இந்த ராகி சுமதி குழந்தைகளுக்கு கண்டிப்பா ரொம்ப பிடிக்கும்.

எத்தனை உருண்டை வேணாலும் சாப்பிடுவாங்க ஒரே ஒரு தடவை மட்டும் உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் இது உங்க குழந்தைகளோட ஃபேவரட் ஆகவே மாறிடும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ்னா இந்த ராகி சிமிலி. மாலை வணக்கம் ஸ்கூலுக்கு போகும் போது குழந்தைகளோட ஸ்னாக்ஸ் பாக்ஸுக்கும் இந்த ராகி சிம்லிய கொடுத்து பாருங்க கண்டிப்பா ஈவினிங் வரும்போது காலியாக்கிட்டு  தான் வருவாங்க.

Advertisement

அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தான் இது பொதுவா சிறுதானியங்களை நம்ம உணவுகள்ல சேர்த்துக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா குழந்தைகளுக்கு வேற ஏதாவது ஒரு உணவு மூலமா சிறுதானியங்கள் கொடுக்க முடியாது சாப்பிடவும் மாட்டாங்க அந்த மாதிரி சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி இனிப்பா ஏதாவது செஞ்சு கொடுத்தா அவங்க சிறுதானியம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் ஸ்னாக்ஸ் வேலையும் முடிஞ்ச மாதிரி இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான சத்தான ராகி சிமிலி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

ராகி சிமிலி | Ragi Chimili Recipe In Tamil

Advertisement
Print Recipe
நம்மராகி மாவும் வேர்க்கடலையும் சேர்த்து செய்யப்போற ராகி சிமிலி தான் பார்க்க போறோம். வெல்லம் சேர்த்து இனிப்பா செய்றதால இந்த ராகி சிமிலி குழந்தைகளுக்கு கண்டிப்பா ரொம்ப பிடிக்கும். எத்தனை உருண்டை வேணாலும் சாப்பிடுவாங்க ஒரே ஒரு தடவை மட்டும் உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் இது உங்க
Advertisement
குழந்தைகளோட ஃபேவரட் ஆகவே மாறிடும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ்னா இந்த ராகி சிமிலி. மாலை வணக்கம் ஸ்கூலுக்கு போகும் போது குழந்தைகளோட ஸ்னாக்ஸ் பாக்ஸுக்கும் இந்த ராகி சிம்லிய கொடுத்து பாருங்க கண்டிப்பா ஈவினிங் வரும்போது காலியாக்கிட்டு  தான் வருவாங்க.
Course snacks
Cuisine tamilnadu
Keyword Ragi Chimili
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 3
Calories 261

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் ராகி மாவு
  • 1 கப் வேர்க்கடலை
  • 1 1/2 கப் வெல்லம்
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 ஏலக்காய்

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  • பிறகு ஒரு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து அடை போல் தட்டி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
  • வேக வைத்த ராகி அடையை நன்றாக ஆற வைக்கவும். ஆரியபிறகுஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  • பிறகு வேர்க்கடலையையும் வெல்லம் மற்றும் ஏலக்காயும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அனைத்தையும் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான ராகி சிமிலி தயார்

Nutrition

Serving: 100g | Calories: 261kcal | Carbohydrates: 24g | Protein: 21g | Cholesterol: 1mg | Potassium: 104mg | Iron: 24mg
Advertisement
Ramya

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 மணி நேரம் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

12 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago