Advertisement
சைவம்

காலை உணவுக்கு சத்தான இந்த ராகி கஞ்சி செஞ்சு குடிச்சு பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!

Advertisement

என்னதான் நம்ம இன்னைக்கு பீட்சா பர்கர் பிரட் டோஸ்ட் பேன் கேக் அப்படின்னு டிஃபரண்டா நிறைய ரெசிபிஸ நம்ம காலை உணவா சாப்பிட்டாலும் நம்மளோட பாரம்பரியமான சிறுதானியங்கள்ல செஞ்சு உணவுகள் ரொம்பவே உடம்புக்கு ஆரோக்கியமானது. கருப்பு கவுனி, ராகி ,வரகு, சாமை ,திணை, குதிரைவாலி அப்படின்னு நிறைய சிறுதானியங்கள் இருக்கு. இந்த சிறுதானியங்கள்ல நம்ம கஞ்சி வச்சு சாப்பிட்டா அது இன்னும் ரொம்பவே சத்தானது.

அந்த வகையில் ரொம்பவே ஆரோக்கியமான ராகி கஞ்சி தான் எப்படி செய்வது என்று பார்க்கப் போறோம் ‌ காலைல எழுந்த உடனே டீ காபிக்கு பதிலா இந்த ராகி கஞ்சி குடிச்சா உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியமானது. ஒருவேளை நீங்க டீ காபிக்கு பதிலா வேறு ஏதாவது தேடுறீங்க அப்படின்னா இந்த ராகி கஞ்சியை செஞ்சு குடிச்சு பாருங்க. இத டீ காபிக்கு பதிலா மட்டும் இல்லாம காலை உணவாகவும் குடிக்கலாம்.

Advertisement

இந்த ராகி கஞ்சி ரெண்டு விதமா செய்யலாம் ஒன்னு காரமா செய்யலாம் இன்னொன்னு இனிப்பா செய்யலாம். இன்னைக்கு நம்ம குழந்தைகளுக்கும் புடிச்ச மாதிரி இனிப்பா தான் இந்த ராகி கஞ்சி செய்ய போறோம். இந்த மாதிரி பாரம்பரியமான உணவுகள் எல்லாம் உங்க குழந்தைகளுக்கு பிடிக்காது அப்படின்னா ஒரு தடவ இந்த ராகி கஞ்சிகள் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் திரும்பி திரும்பி செய்ய சொல்லி குடிப்பாங்க அந்த அளவுக்கு இந்த ராகி கஞ்சியோட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

ஒருவேளை காலையில குழந்தைங்க இத குடிக்கலனா ஈவினிங் டயத்துல ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா இந்த ராகி கஞ்சியை நீங்கள் செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்றதால ஈஸியா நீங்க அதை செஞ்சு கொடுத்தா குடிச்சிட்டு வாங்க டேஸ்டும் இனிப்பா ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான ஈஸியாக செய்யக்கூடிய சத்தான ராகி கஞ்சி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

ராகி கஞ்சி | Ragi Kanji Recipe In Tamil

Advertisement
Print Recipe
ராகி கஞ்சி ரெண்டு விதமா செய்யலாம் ஒன்னு காரமா செய்யலாம் இன்னொன்னு இனிப்பா செய்யலாம். இன்னைக்குநம்ம குழந்தைகளுக்கும் புடிச்ச மாதிரி இனிப்பா தான் இந்த ராகி கஞ்சி செய்ய போறோம்.இந்த மாதிரி பாரம்பரியமான உணவுகள் எல்லாம் உங்க குழந்தைகளுக்கு பிடிக்காது அப்படின்னாஒரு தடவ இந்த ராகி கஞ்சிகள் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் திரும்பிதிரும்பி செய்ய சொல்லி
Advertisement
குடிப்பாங்க அந்த அளவுக்கு இந்த ராகி கஞ்சியோட டேஸ்ட் ரொம்பவேஅட்டகாசமா இருக்கும். ராகி கஞ்சியை நீங்கள் செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே ஆரோக்கியமானதுஅப்படின்றதால ஈஸியா நீங்க அதை செஞ்சு கொடுத்தா குடிச்சிட்டு வாங்க டேஸ்டும் இனிப்பாரொம்ப சூப்பரா இருக்கும்.
Course Appetizer
Cuisine tamil nadu
Keyword Ragi Kanji Recipe In Tamil
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 160

Equipment

  • 1 அடி கனமான பாத்திரம்

Ingredients

  • 3 டேபிள்ஸ்பூன் ராகி மாவு
  • 1/4 லிட்டர் பால்
  • 2 டம்ளர் தண்ணீர்
  • 1 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை குங்குமப்பூ

Instructions

  • முதலில் ராகி மாவில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். கலந்து வைத்துள்ளமாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
  • பத்து நிமிடங்களுக்குபிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு பால் சேர்த்து கைவிடாமல் ஒரு பத்து நிமிடங்கள் கிளறவும்
  • நன்றாக கிளறிய பிறகு அதனுடன் வாசனைக்கு குங்குமப்பூ சேர்த்து இறக்கினால் சுவையான ராகி கஞ்சி தயார்.
  • குங்குமப்பூ இருந்தால் சேர்த்துக் கொள்ளவும் இல்லை என்றால் சேர்க்காமல் இருக்கலாம்

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 56g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g

இதையும் படியுங்கள் : சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை ராகி மாவுல இப்படி கேக் செஞ்சு பாருங்க வாயில் வைத்தவுடன் கரையும்!

Advertisement
Ramya

Recent Posts

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

1 மணி நேரம் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

3 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

5 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

6 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

10 மணி நேரங்கள் ago