இன்று நாம் மதிய உணவாக அல்லது மழைக்கு இதமா இரவு நேரங்களில் சுட சுட சாப்பிடுவதற்கு ஏற்ற ரச சாதம் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். பொதுவாக அசைவ பிரியர்கள் சைவ பிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த ரசம் ஊற்றி சாப்பிடுவது மிகவும் பிடித்து போனதாக இருக்கும். ரசம் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள் அதனால் இது போன்ற ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரச சாதத்தை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான முட்டை மசாலா சாதம் செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ரெசிபியாக இது மாறி போகும் மறுமுறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான ரச சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
ரசம் சாதம் | Rasam Sadam Recipe in Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
ரசம் பொடி செய்ய
- 1 tsp சீரகம்
- ½ tsp மிளகு
- 2 tsp மல்லி
- ¼ tsp பெருங்காயம்
- 3 பல் பூண்டு
- 1 கொத்து கருவேப்பிலை
ரசம் சாதம் செய்ய
- 1 டம்பளர் அரிசி
- 2 tbsp துவரம் பருப்பு
- 1 சிறிய டம்பளர் புளி கரைசல் நெல்லிக்காய் அளவு
- 2 தக்காளி நறுக்கியது
- 2 tbsp எணணெய்
- 1 tsp கடுகு உளுந்த பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 வர மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- 5 டம்பளர் தண்ணீர்
- கொத்தமல்லி சிறிது
செய்முறை
- முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் அரிசி மற்றும் துவரம் பருப்பு எடுத்துக் கொண்டு இரண்டு முறை தண்ணீர் வைத்து அலசி பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நாம் சமைக்கும் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து பின் கரைத்து ஒரு சிறிய டம்ளர் அளவு புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ரசப்பொடி செய்வதற்கு தேவையான சீரகம், மிளகு, மல்லி, பெருங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்கவும். பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் வர மிளகாய், கருவேப்பிலை மற்றும் நாம் மிக்ஸியில் அரைத்த ரசப்பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும். இதனுடன் நாம் கரைத்து வைத்திருக்கும் புளியை கரைசலை சேர்க்கவும்.
- பின் ரசம் ஒரு கொதி வந்ததும் நாம் உறவைத்த அரிசி, ஐந்து டம்ளர் அளவு தண்ணீர் மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தூவி ஒரு ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுட சுட ரசம் சாதம் இனிதே தயாராகிவிட்டது.