Advertisement
சைவம்

மாலை நேர ஸ்நாக்ஸாக வாழைக்காய் பூண்டு ரோஸ்ட் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

வாழைக்காய் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு காய் வகையாகும். வாழைக்காய் பூண்டு ரோஸ்ட், உருளைக் கிழங்கு ரோஸ்ட் போலவே ரொம்ப ரொம்ப சுவையாக செய்யலாம். வாழைக்காய் சாப்பிட்டால் வாய்வு என்று சொல்லி அதனை பலரும் ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. எல்லா காய்கறியும் ஏதோ ஒரு சத்துக்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும். வாய்வை நீக்க பூண்டு சேர்த்து சமைக்க வேண்டும். எனவே வாழைக்காயில் இருக்கும் சத்துக்களை இழக்காமல் இப்படி செய்து பாருங்கள் கறி சாப்பிடுவது போல ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும்.

வாழைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் செரிமானத்திற்கு மிகவும் உதவும் வகையில் இருக்கும். அடிக்கடி வாழைக்காயை உணவில் எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கும் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. வாழைக்காயில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருப்பதால் நம் அன்றாட உணவில் அடிக்கடி வாழைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த வகையில் வாழைக்காய் பூண்டு ரோஸ்ட் செய்து கொடுத்தால் ஒரு கொஞ்சம் கூட மிஞ்சாது. மிகவும் எளிதாக செய்யக் கூடிய இந்த வாழைக்காய் ரோஸ்ட் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Advertisement

வாழைக்காய் பூண்டு ரோஸ்ட் | Raw Banana Garlic Roast

Print Recipe
வாழைக்காய்என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு காய் வகையாகும். வாழைக்காய் ரோஸ்ட்,உருளைக் கிழங்கு ரோஸ்ட் போலவே
Advertisement
ரொம்ப ரொம்ப சுவையாக செய்யலாம். வாழைக்காய் சாப்பிட்டால்வாய்வு என்று சொல்லி அதனை பலரும் ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. எல்லாகாய்கறியும் ஏதோ ஒரு சத்துக்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும். வாய்வை நீக்க பூண்டுசேர்த்து சமைக்க வேண்டும். எனவே வாழைக்காயில் இருக்கும் சத்துக்களை இழக்காமல் இப்படிசெய்து பாருங்கள் கறி சாப்பிடுவது போல ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும்.
Advertisement
வாழைக்காய் பிடிக்காதவர்களுக்குகூட இந்த வகையில் செய்து கொடுத்தால் ஒரு கொஞ்சம் கூட மிஞ்சாது. மிகவும் எளிதாக செய்யக்கூடிய இந்த வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்தபதிவை நோக்கி பயணிப்போம்.
Course Fry, Roast
Cuisine tamilnadu
Keyword Raw Banan Roast
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 105

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 வாழைக்காய்
  • 5 பூண்டு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
  • 1 வெங்காயம்
  • மிளகு தூள் தேவைக்கு
  • உப்பு தேவைக்கு

தாளிக்க

  • எண்ணெய் சிறுது
  • கடுகு சிறுது
  • சீரகம் சிறுது

Instructions

  • பூண்டுடன் பொடி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வாழைக்காயை தோல் நீக்கி, சதுரமாக நறுக்கி வைக்கவும்.
  • தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, பின்பு வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவை சேர்த்து பிரட்டி நீர் விட்டு வேக விடவும்.
  • நன்கு வெந்ததும், மேலும் எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும். அடி பிடிக்காத அளவு கிளறிவிட்டு பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 22.84g | Protein: 1.09g | Fat: 0.33g | Fiber: 3.1g | Iron: 0.26mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

34 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago