வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க அரிசிக்குள் இந்த பொருளை மறைந்து வையுங்கள்!

- Advertisement -

நாம் வாழ்த்து கொண்டிருக்கும் இந்த உலகைப் பொறுத்தவரை பணம் இல்லை என்றால் நம்மை ஒரு மனிதர்களாக கூட மதிக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. அந்த பணத்தின் மதிப்பு என்னவென்று இந்த காலத்து சிறு குழந்தைகளுக்கு கூட தெரிந்திருக்கும் அப்படிப்பட்ட பணத்தை தான் பலரும் தாங்களும் சம்பாதித்து விட மாட்டோமா ? என்ற ஒரு விடாமுயற்சியுடனும், கடின உழைப்புடனும் வருடம் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் இருந்தாலும் அவர்கள் கையில் மட்டும் பணம் என்பது நிலைப்பதே இல்லை.

பணபுழக்கம் சாதரனமாக இருந்தால் தான்

அது நமது வீடாக இருந்தாலும் சரி நாம் தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி இந்த இடங்களில் பணப்புழக்கம் என்பது சாதாரணமான ஒரு விஷயமாக இருந்தால் தான் ஒரு நாம் செய்யும் வியாபாரமாக இருந்தாலும் தொழிலாக இருந்தாலும் சரி அதில் ஒரு முன்னேற்றம் இருக்கும் அதன் மூலமாக நமக்கு வருமானம் என்பது அதிகரித்துக் கொண்டே போகும். இப்படி நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வரும்போது அதன் மூலம் நம் வீட்டில் சந்தோஷமும் பல மடங்காக பெருகி இருக்கும்.

- Advertisement -

சிவப்பு மணி பர்ஸ்

ஆனால் பண வரவு இல்லாமல் இருக்கும் உங்களது வீட்டிலும் பணவரவை அதிகரித்து உங்கள் வீட்டில் பணப்புழக்கம் தாராளமாக மாறுவதற்காக ஒரு பரிகாரம் செய்தால் போதும் அதற்காக நீங்கள் மிகப்பெரிய செலவு எல்லாம் செய்ய தேவையில்லை. உங்கள் சட்டை பையில் இருந்து ஒரு 100 ரூபாய் பணம் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் ஒரு சிவப்பு நிற மணி பர்ஸ அல்லது சிவப்பு நிற கவர் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வைத்திருக்கும் 100 ரூபாயை இந்த சிவப்பு நிறம் மணி பர்ஸில் வைத்து உங்கள் வீட்டில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் வைத்து புதைத்து விடுங்கள் நீங்கள் இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரித்து பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும்.

-விளம்பரம்-

வால் நட்

இதேபோல் நீங்கள் வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும் பண வரவு என்பது அதிகரிக்க வேண்டுமா ? அல்லது நீங்கள் செய்யும் வியாபாரமா, தொழிலோ பெருகிக்கொண்டே செல்ல வேண்டுமா ?அதற்காக நீங்கள் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் வருபவர்களை சந்திப்பதற்கு ஒரு மேஜை ஒன்று வைத்திருப்பீர்கள் அல்லது பணம் போடுவதற்காக வைத்திருக்கும் கல்லாப்பட்டி மேசை எதுவாக இருந்தாலும் அந்த மேசை மீது ஒரு கண்ணாடி பவுல் வைத்து அதில் வால்நட்டை நிரப்பி வைத்து விடுங்கள்.

குருவின் அனுகிரகம்

எதற்காக வால்நட்டை நிரப்பி வைக்கின்றோம் தெரியுமா? வால்நட் ஆனது குரு கிரகத்தின் அனுகிரகம் பெற்றது மேலும் குருவின் பார்வை உங்கள் மீது விழும் பட்சத்தில் கோடி பலன் உங்களுக்கு கிடைக்கும் என்று பெரும்பாலானோர் கூறி இருப்பார்கள். அதுபோலத்தான் நீங்கள் உங்கள் மேஜையின் மீது வால்நட்டை வைத்திருக்கும் போது குருவின் அனுகிரகம் பெற்று நீங்கள் வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பண வரவு என்பது அதிகரிக்கும். பணப்புழக்கம் என்பது சாதாரணமாகவே இருக்கும் . உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கூட நீங்கள் பிடிப்பதற்கு வாய்ப்பு உண்டு.

பண வரவு அதிரிக்க

இப்படி உங்கள் வீட்டிலும் மற்றும் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலும் பணப்புழக்கம் இருப்பதற்காகவும் பணவரவு அதிகரிப்பதற்காகவும் நான் மேலே சொன்ன இந்த பரிகாரங்களை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ஆனால் எந்த ஒரு காரியத்தையும் முழு நம்பிக்கையோடு செய்யும்போது அதற்கான முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள் அதே போல தான் இந்த பரிகாரங்களையும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here