வாழ்க்கையில் செல்வம் சேர என்ன செய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் தேடலாக உள்ளது. ஆனால் சிலருக்கு மட்டும அது சரியாக கை கூடுகிறது. பலருக்கும் வரவு வருவதற்கு முன் செலவுகள் பெரிதாக பட்டியல் போட்டு காத்திருக்கும் நிலை தான் உள்ளது. இன்னும் சிலருக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற நிலையில் வாழ்க்கை உள்ளது. ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் அதிகரித்து இருந்தால் சுக போகமான வாழ்க்கை அமையும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் ஆன்மிகத்தில் கூறியுள்ள சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் விரைவில் பணக்காரர் ஆக முடியும். 12 ராசிக்காரர்களும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தடையில்லா வருமானத்தை பெற முடியும். அதனால் எந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பணக்காரராக மாற தினமும் மாலை வேளையில் வீட்டின் தலை வாசலில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அல்லது வீட்டை விட்டு கிளம்பும் போது ஒரு சிட்டிகை வெல்லத்தை எடுத்து, வீட்டின் தென் பகுதியில் வைத்து விட்டு செல்லலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் விரைவில் பணக்காரர் ஆக தினமும் இரவு நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் இரண்டு நெய் தீபம் ஏற்ற வேண்டும். அல்லது காலையில் பசு மாட்டிற்கு கீரை அல்லது வாழைப்பழங்களை சாப்பிட கொடுக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பணக்காரர்கள் ஆக தங்களின் பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடலாம். அல்லது செல்வம் சேர ஒவ்வொரு புதன் கிழமையன்றும் புதன் பகவானுக்கு பச்சை பயிரை நிவேதனமாக படைத்து வழிபடலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தினமும் மாலை நேரத்தில் அரச மரத்தின் அடியில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம். அல்லது திங்கள் கிழமை அன்று சிவன் கோவிலில் நடக்கும் அபிஷேகத்திற்கு பசும்பாலை தானமாக அளிக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பணக்காரர் ஆக தினமும் இரவு நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அல்லது தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி பூஜையறையில் வைக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பணக்காரராக மாற ஒரு முழு தேங்காயை சிவப்பு நிற துணையில் கட்டி, பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இல்லையெனில் மாதத்திற்கு ஒரு முறை புதன் கிழமைகளில் நெல், கோதுமை போன்ற தானியங்களை தானமாக அளிக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பணக்காரர் ஆக வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி கோவிலுக்கு சென்று தேங்காயால் செய்த இனிப்புகள் படைத்து வழிபடலாம். அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயங்களில் அபிஷேகத்திற்கு தூய்மையான அரிசியை தானமாக வழங்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பணக்காரர் ஆக வீட்டில் வாழை மரம் நட்டு வைத்து வளர்த்து வரலாம். அல்லது சீக்கிரம் செல்வச் செழிப்பு உண்டாக ஒரு சிகப்பு துணியில் சிறிது பார்லி அரிசியை வைத்து முடிந்து வீட்டின் தென்கிழக்கு மூலையில் யாரும் பார்க்காத படி வைத்து விட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பணக்காரர் ஆக லட்சுமிக்கு 108 வெற்றிலையில் குங்குமம் தடவி அர்ச்சனை செய்து வர வேண்டும். அல்லது பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வருவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தினமும் வீட்டின் வடகிழக்கு மூலையில் ஐந்து எண்ணெய் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வந்தால் விரைவில் பணக்காரர் ஆவார்கள். சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தால் செல்வம் சேரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் விரைவில் பணக்காரர் ஆக வெள்ளிக்கிழமை தோறும் தேங்காயை உடைத்து தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி வர வேண்டும். அல்லது சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி சனி பகவானை வழிபடலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி கோவிலுக்கு சென்று தேங்காய் துருவல் படைத்து வழிபட்டு வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம். அல்லது வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபட வேண்டும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்


