மனிதர்கள் இன்றைய சூழலில் கண் திருஷ்டி எதிரிகள் தொல்லை எதிர்பாராத சூழலில் ஏற்படும் அவமானம் போன்ற மூன்று விஷயங்களால் மிகவும் பாதிப்பு அடைகிறார்கள். இது மூன்றுமே மனிதனை அதிகப்படியாக பாதிப்படைய செய்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு தாந்திரீக ரீதியாக ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது அதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கண் திருஷ்டி பரிகாரம்
கண் திருஷ்டி பிரச்சனை நீதிமன்ற வழக்குகளால் பிரச்சனை குடும்பத்தில் சண்டை சச்சரவு எதிரிகளால் பிரச்சனை போன்ற அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் வெளிவருவதற்கு இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். வீட்டில் உள்ள சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மிளகாய் 48 என்ற எண்ணிக்கையில் ஒரு வெள்ளை துணியில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை அப்படியே ஒரு முடிச்சாக கட்டி அரை லிட்டர் அளவிற்கு நல்லெண்ணெய் எடுத்து அதில் போட வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்கள் அந்த எண்ணெயிலேயே ஊறவேண்டும் பிறகு அந்த நல்லெண்ணையை பயன்படுத்தி வீட்டில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.
நல்லெண்ணெய் தீபம்
வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு சிறிய தட்டு வைத்து அதன் மேல் ஒரு அகல் விளக்கு வைத்து உங்கள் குல தெய்வத்தை நன்றாக பிரார்த்தனை செய்து கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த அகல் விளக்கில் திரி போட்டு தீபம் ஏற்றி வரவேற்பு அறையிலேயே வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் இந்த விளக்கு எறிந்தால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இந்த விளக்கை காலை அல்லது மாலை நேரத்தில் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஏற்றலாம் முடிந்தால் தினமும் தொடர்ந்து 48 நாட்கள் இந்த விளக்கை ஏற்றுவது சிறப்பான நன்மைகளை கொடுக்கும். கடுமையான கண் திருஷ்டி எதிரி தொல்லையால் அவதிப்படுபவர்கள் நீதிமன்ற வழக்குகளால் அவமானத்திற்கு உள்ளாகி சிரமப்படுபவர்கள் அனைவரும் இந்த தீப வழிபாட்டை செய்து பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டின் இந்த திசையில் அல்லது இந்த இடங்களில் மயிலிறகை வைத்தால் பணம் பெருகுமாம்!


