ஒரு குடும்பத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பாக கவசமாக இருப்பது குலதெய்வத்துடைய அருள் தான். எந்த ஒரு குடும்பம் குலதெய்வத்தின் அருளோடு இருக்கிறதோ அந்த குடும்பத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். சில வீடுகளில் குலதெய்வத்துடைய ஆசீர்வாதம் சுத்தமாக கிடைக்காமல் கூட இருக்கும் ஏதாவது ஒரு கெட்ட சக்தியால் குலதெய்வம் கட்டுப்பட்டு கிடக்கும். குலதெய்வத்தை கட்டிப்போட்டு விட்டார்கள் என்று சொல்வார்கள் இதே போல் பிரச்சினைகள் உங்களுடைய குடும்பத்தில் இருந்தால் நிலை வாசலிலேயே உங்கள் குலதெய்வம் இருக்கிறது. வீட்டிற்குள் வரவில்லை என்றால் குலதெய்வத்தை வீடிற்குள் வர வைப்பதற்கு பரிகாரம் செய்யலாம் அப்படி குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க ஒரு எளிமையான பரிகாரத்தையும் மந்திரத்தையும் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

குலதெய்வம்
பெரும்பாலும் ஒரு சிலருக்கு குலதெய்வம் யார் என்பது தெரியாது குலதெய்வம் எந்த கோவிலில் வாசம் செய்கிறது என்பது தெரியாது. ஆனால் ஒரு சிலருக்கு குலதெய்வம் யார் என்று தெரியும் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது எப்பொழுதுமே பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். குலதெய்வத்தை முழுமையாக வழிபாடு செய்வதற்கு முன்பாக வீட்டில் பூஜை அறையில் குலதெய்வத்திற்கு முன்பாக சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்பது சிறப்பான பலனை தரும்.
குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க விளக்கு பரிகாரம்
குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்க வேண்டும் என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று விடுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க வேண்டும். மேலும் குலதெய்வம் எப்போதும் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மேலும் குலதெய்வத்திடம் உங்களுடைய அனைத்தையும் கூறி “ஓம் க்ரீம் குல தேவதா நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த அனைத்து பிரார்த்தனைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த பிரார்த்தனைகளை செய்வதால் நிச்சயமாக குலதெய்வம் உங்களுடைய வீட்டிற்கு வரும். மனதார முழு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : செல்வத்தை பெருக்கக் கூடிய வெள்ளிக்கிழமை பரிகாரம்!!